22 comments on “இதயங்களை உடைக்கும் உள்ளங்கள்

  1. வணக்கம்

    நெஞ்சைக் கசிய வைத்துவிட்டீர்கள் ரூபன். எழுத்தின் வெற்றி இதுதான்… நாங்கள் அறிவொளி இயக்கத்தினைத் தொடர்ந்து “குழந்தைத தொழிலாளர் ஒழிப்பு”க் கருத்துகளை மாவட்டமெங்கும் பிரச்சாரம் செய்தோம் அப்போது
    “ஓட்டலிலே மேசை துடைக்கும் சின்ன அரும்பைப் பாரு-நீ
    கொஞ்சுகிற பிஞ்சு முகம் போலில்லையா கூறு,
    காடுகரையில் விறகொடித்து வதங்குது ஒரு பூவு -உன்
    கனவுகளில் சிரிக்கும் அந்தக் கண்மணியா பாரு” என்னும் அருப்புக்கோட்டை பேரா.ரவிச்சந்திரன் எழுதிய பாடலைப் பாடும்போது கூட்டமே விசும்பித் தவிக்கும்… கலையின் வெற்றி அதுதானே? தொடர்ந்து இன்னும் செறிவாக எழுதிட வேண்டுகிறேன். வாழ்த்துகள்

    அன்புடன்,

    நா.முத்துநிலவன்.

    புதுக்கோட்டை

    (கவிஞர் முத்து நிலவன் ஐயா
    அவர்கள் இந்த கவிதைக்கு மின்மடலில் எழுதி அனுப்பிய பின்னூட்டகருத்து) இதை பாகிர்கிறேன்

  2. மிக அற்புதமான கவிதை!

    இதயத்தை நொறுக்கிய கவிதை!

    நண்பரே நாங்கள் இதற்கு பின்னூட்டம் இட்டும் ஏன் உங்களை வந்து அடையவில்லை என்று தெரியவில்லை!. இதர்கும் இதர்கு முன்னும் தங்கள் படைப்புக்கு எல்லாம் பின்னூட்டம் இட்டும் உங்களை அடைகின்றத என்
    று தெரியவில்லை. பல சமயங்களில் இரண்டு தளங்களும் வருவதால் எங்கு இடுகின்றோம் என்பது தெரியாமல் போய்விடுகின்றது! கொஞ்சம் எளிதாக்க முடியுமா என்று பாருங்கள் நண்பரே!

    • வணக்கம்
      நண்பரே.

      நீங்கள் எழுதிய பின்னூட்ட கருத்து எனக்கு 1செக்கன் அல்லது 1நிமிடத்தில் வந்து கிடைத்துள்ளது…. இதயங்களை உடைக்கும் உள்ளங்கள் என்ற கவிதையில்14வது கருத்தாக உள்ளது… பாருங்கள் ஒரு தடவை

      அதைப்போல எனது google பிளக் தளத்தில் கூட தங்களின் கருத்தும் த.ம வாக்கும் வந்து கிடைத்துள்ளது… நீங்கள் இடும் கருத்து… கண்டிப்பாக அழியமாட்டது….எப்போதும் இருக்கும் நண்பரே… தகவலுக்கு நன்றி..

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  3. பிஞ்சகளின் நிலையைப் படங்களுடன்
    உண்மை காட்சிகளைச் சுட்டி
    வீட்டுக்கு வீடு வாழ்க்கை நிலையை
    எண்ணிப் பார்க்க வைத்த கவிதை
    இது!

  4. கண்டிப்பாக குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும். அரசு என்னதான் முயன்றாலும், குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பெற்றோர்கள் மனம் வைத்தால்தான் முற்றுப்புள்ளி வைக்க முடியும். பெற்றோர்கள் இல்லாதவர்களுக்கு அரசாங்கம்தான் பெற்றோர்.

  5. நண்பரே அருமை! படித்ததும் மனம் கனத்து விட்டது! குழந்தைத் தொழிலாளர்களால் தான் பட்டாசு உலகில் வெடிக்கிறது அவர்களது வாழ்விலும் என்பதை அறிந்த நாங்கள் தீபாவளிக்குப் பட்டசு வாங்குவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது! ஏதாவது கடைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்தால் அந்தக் கடை உரிமையாளரிடம் கேட்பதும் உண்டு!

    நலதொரு பதிவு!. மனத்தைக் கசக்கிய பதிவு!

    வாழ்த்துக்கள்!

    த.ம.

  6. அன்பு சகோதரருக்கு வணக்கம்
    பிஞ்சு குழந்தைகளின் அலறல் கேட்டு ஆற்றாமையால் எழுந்த நெஞ்சை கணக்க வைக்கிறது. தங்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள். தொடர்ந்து தங்கள் படைப்புகளைத் தாருங்கள். பகிர்வுக்கு நன்றி.

  7. ஒவ்வொரு வரியும் உண்மையைக் கூவி உள்ளத்தைக் கலக்குகிறது…மாறவேண்டும் மாறவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம்..மாறுவதெப்போ…

  8. //சிறுவர் அடிமை -அரங்கேறுகிறதே…..
    உலகமே கண்விழித்துப் பாரும்.
    பார் எங்கும் பிறந்திட்ட பாலகனின்.
    வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிடுவாய்.//

    சிறுவர்கள் அடிமை வாழ்வு மறைய அவர்கள் பெற்றோர்கள் நிலை உயர்ந்தால் தான் உண்டு.
    அவர்கள் அன்றாட தேவைகளுக்கு தன் பிஞ்சு குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை வராது.
    உங்கள் கவிதை நெஞ்சை நெகிழ வைப்பதாய் உள்ளது.
    பாலகனின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிடும் காலம் வர வாழ்த்துக்கள்.

  9. உயிரோட்டமிக்க வரிகள். படித்து முடித்தபோது என்னையுமறியாமல் கண்களீல் கண்ணீர் தடுக்கமுடியவில்லை தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  10. குழந்தைகளை தொழிலாளர்களாக ஆக்கும் பழக்கம் இன்னும் இலை மறை காய் மறையாக இங்கும் அங்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது! இதை ஒழிப்பதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். என்ன இருந்தாலும் அவர்கள் நம் நாளைய நாட்டை ஆள போகும் நம் மண்ணின் மைந்தர்கள் அல்லவா!!

  11. இப்பதிவைப் படிப்பவர்கள் இதயம்
    நிச்சயம் உடைந்து நொறுங்கும்
    பின் மனித நேயம் மிக்க இதயமாக
    நிச்சயம் மாறும்
    பகிர்வு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  12. நீ செய்த தீப்பெட்டியை திறந்து பார்த்தால்
    உன் பிஞ்சு விரல்கள் அத்தனையும்- உறங்கி கிடக்கிறது.

    பிஞ்சு நெஞ்சின் வலியை கண்டு
    மிஞ்சும் வலியில் துடி துடித்திடவே
    கொன்றிடாயோ உலகே இக்கொடுமையினை
    என்று கெஞ்சும் நிலை கண்டு பூரித்தேன்
    நீ வாழ்க பொற்றாமரை போல..!

    நன்று நன்று தொடர வாழ்த்துக்கள்…..!

  13. ”…இன்றைய சிறுவர்கள் நாளைய இளைஞர்கள்
    என்ற மெய்யா மொழி அருள் வாக்கு எங்கே போனது????…”
    சரியான கேள்வி….
    விடை தான் யார் கையில்!!’!…
    இறைவன் அருளட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

  14. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே

    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(இதயங்களை உடைக்கும் உள்ளங்கள்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி