
நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்
முகவரி இழந்த மனிதனாக-
சில காலங்கள் நான் இருந்தேன்
உன்னை கண்ட நாள் முதலாய்
எனகென்று சொந்த முகவரி -உருவானது.
சிகரத்தை ஏற அடையும்
அணில் பிள்ளை போல-நானும்
என்மனதுக்குள். உன் நினைவுதான்
படிப்படியாய் ஏறி
என் இதயத் துடிப்பை தூண்டுதடி.
நீ ஒரு வார்த்தை என்னிடம் சொல்லாமால்
உன் மனசு போன போக்கில்
உன் வீட்டுக்கு சென்றாயே.
நான் உன்னை பார்க்காத நாட்கள் எல்லாம்
எனக்கு மயான பூமியில் வாழ்ந்தது-போல உணர்வு
நீ வந்து என்னுடன் பேசாமல் இருந்த நாட்கள்எல்லாம்
இயற்கைதான் எனக்கு உற்ற தோழனாக –இருந்ததடி
இசைபாடும் வண்டுகள்.பாட்டுப்பாடு குயில்கள்
தோகை விரித்து ஆடும் மயிலின் அகவலும்
என் மனதுக்கு சொந்தமாக இருந்தடி
நீ பாவாடை தாவணியும் அணிந்து
வீதியிலே வரும் போது..
நீ ஒரு தேவதைதானே….
உன் அழகின் வசிகரம் கண்டு.
எத்தனை பெடியன்கள் உன்னை
மனதில்-நினைத்திருப்பார்கள்……
நான் உன்னை காதலிக்க முன்பு
அந்த சிறைக் கூட்டையும் -தாண்டி
உன் மனதில் நான் குடிகொண்டேனடி
நான் ஆசை கொண்டு அள்ளிக்-கொடுத்தேன்
எத்தனையோ. அத்தனையும் வீனாக –போனதடி.
உன்னை நம்பினேன் எனக்கு முகவரி வந்ததென்று
ஆனால்.நீ இறுதியில் கண்ணீரில்
கரையவைத்து விட்டுச் -சென்றாயே.
உன்னை நினைத்து நினைத்து. அழுது அழுது.
நீ என் கன்னக் குழியில் உன் புன்னகை உதட்டினால்
ஒற்றி வருடிய முத்தங்கள் எல்லாம்.
என் கண்ணீர்த் துளிகள் கழுவிச் -சென்றதடி.
என் உறவுகள் நண்பர்கள் மடிந்தாலும்
அவர்களுக்கு அழுவதற்கு என்னிடம்
கண்ணீர் இல்லையடி.
நீ கல்லறையில் உறங்கி விட்டாய்
என் கண்ணீர்துளிகள் எல்லாம்
என் கண்மணிக்கு -பன்னீர்
துளிகளாக வீசியதடி……….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்ன ஒரு உருக்கமான கற்பனை. நெஞ்சில்கூட நினைய முடியாதபடி அவ்வளவு உருக்கம்,சோகம். யாருக்கும் வேண்டாம் இன்னிலை. அன்புடன்
கல்லறைக் காதல் கவிதை கண்ணீரை வரவழைத்தது
சோகத்தில் ஆழ்த்தும் கவிதை
நல்ல படைப்பு
சிறந்த பதிவு
உண்மையான உணர்வு
நீளமான ஆனா அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரா,
மிக உருக்கமான கவிதை வரிகள்..காதலி நிரந்தரமாய் பிரிந்து சென்ற பின்னர் ஒரு காதலன் படும் அளவில்லா துயரத்தை எடுத்து சொல்லுகிறது! அருமையான கவிதை,வாழ்த்துக்கள் 🙂
அலுவலக பணிகள் மற்றும் கணினி சிக்கல் காரணமாக வலைப பக்கம் வர முடியவில்லை. புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
காதல் பொங்கும் கவிதை
மனதினைக் கனக்கச் செய்த கவிதை
என் உறவுகள் நண்பர்கள் மடிந்தாலும்
அவர்களுக்கு அழுவதற்கு என்னிடம்
கண்ணீர் இல்லையடி.
நீ கல்லறையில் உறங்கி விட்டாய்
என் கண்ணீர்துளிகள் எல்லாம்
என் கண்மணிக்கு -பன்னீர்
துளிகளாக வீசியதடி………//
நெஞ்சை கலங்க வைத்த கவிதை. காதலியை பிரிந்த காதலன் சோகத்தை அழகாய் சொல்கிறது.
இனி யாருக்கும் இந்த நிலை வரவேண்டாம்.
காதல் வாழ்க!
மென்சோகக் கவிதை… மிகவும் அருமை…!
கவிதை நெஞ்சைக்குடைகின்றது சகோ.
ரூபன் நல்ல கவிதை.
மிகவும் உருக்கமான கவிதை நெஞ்சை உலுக்கும் வரிகள் கண்களில் நீரை வரவழைத்துவிட்டன
அருமையான காதல் கவிதை! அதைக் கடந்து நான் வந்துவிட்டதால் என்னை இது பெரிதும் ஈர்க்கவில்லை!
நீ பாவாடை தாவணியும் அணிந்து
வீதியிலே வரும் போது..
நீ ஒரு தேவதைதானே//// உண்மையைத் தவிர வேறோண்டுமில்லை
வணக்கம் ரூபன்!
முகவரியாக நினைத்தவள் கல்லறை சென்றால்…. 😦
அழகிய கவிதை ரூபன்..மனதை ஒரு கலக்கு கலக்கிவிட்டன இறுதி வரிகள்!
உருக வைக்கும் வரிகள்…
வாழ்த்துக்கள் தம்பி…
காதல் புலம்பல்கள்….! :))))
அன்பு கவிஞருக்கு தங்கள் படைப்புகளை BLOGSPOT இலேயே தொடரவும். நிறைய பின்னூட்டங்கள் வரும். WORDPRESS இல் ஒரு கருத்துரை தருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.
கண்ணீரால் நனைந்திட்ட கல்லறைக் காவியம்!
என் உறவுகள் நண்பர்கள் மடிந்தாலும்
அவர்களுக்கு அழுவதற்கு என்னிடம்
கண்ணீர் இல்லையடி.
நீ கல்லறையில் உறங்கி விட்டாய்
என் கண்ணீர்துளிகள் எல்லாம்
என் கண்மணிக்கு -பன்னீர்
துளிகளாக வீசியதடி…
கவி வரிகள் நெஞ்சை உருக்கியது. காலப் போக்கில் அந்தக் கண்ணீர் கனக்கும் இதயத்தையும் கழுவட்டும்.
நன்றி தொடர வாழ்த்துக்கள்….!
கவிதை வரிகள் காட்சிகளாய்
படிப்பவர் மனதில் விரியும் அற்புதம்
மனம் கவர்ந்த அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
பிரிவின் வலி கொடிதிலும் கொடிது !
உருக்கமாக இருந்தது !
காதல் படுத்தும் பாடு.
சோகம் மறைந்து இன்பம் நிலைக்கட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
காதலனின் கையறு நிலை கவிதை..மனதைக் கவர்ந்தது !
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய் )என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-