24 comments on “டெங்குவின் கோரவத் தாண்டவம்

  1. கொசு மருந்து தடவிக் கொள்வது மிகவும் முக்கியம்.
    நாங்கள் ஓடாமஸ் தடவாமல் எங்கு செல்வது இல்லை.எல்லா இடங்களிலும் கொசு இருக்கிறது.சுற்றுப்றத்தை தூய்மையாக வைத்து, கொசு மருந்துகள் தெளித்து கொசுவை ஒழித்தால் நல்லது.
    உங்கள் கவிதை கலங்க வைத்து விட்டது.

  2. வணக்கம் சகோதரா,
    இன்றைய காலகட்டத்தில் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் மிக கொடியது. ஒரு தாயின் சோகத்தை விவரிக்கும் உணர்ச்சி மயமான வரிகள்! இத்தகைய சோகங்கள் ஏற்படாமல் இருக்க மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடு படுவது அவசியம். வாழ்த்துக்கள் 🙂

  3. கண்களில் கண்ணீரை வரவழைத்த வரிகள் .இது ஓர் உண்மைச் சம்பவம் எனில் என் ஆழ்ந்த அனுதாபங்களும் கூட 😦 உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேற வேண்டும் சகோதரா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  4. அனைவர் உள்ளத்திலும் உள்ள
    ஆதங்கத்தை அருமையான கவியாக
    பதிவு செய்தவிதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  5. வணக்கம் சகோதரர்
    சோகத்தைக் கருவாக்கி மிக நேர்த்தியாக ஒரு தாயுள்ளம் பேசுவது போல் டெங்குவிற்கு எதிராக விழிப்புணர்வு குரல் கொடுக்கும் தங்கள் கவிதை கண்டு உள்ளம் நெகிழ்கிறேன். சமுதாயத்தில் நடக்கும் இது போன்ற சோகங்களைத் தனக்கு நடந்ததாகவே எண்ணக்கூடிய ஒரு உள்ளத்தால் மட்டுமே இப்படியொரு கவியைத் தர முடியும் என்பதை நான் அறிவேன். அந்த வகையில் தங்களோடு நட்பு கொண்டது எண்ணி மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன் சகோதரர். தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும். தொடர்க.

  6. மனதைத் தொட்ட கண்ணீர்க் கவிதை! டெங்குவை ஒழிப்போம்! கூட்டு முயற்சியால்தான் இதனைச் செய்ய முடியும்.! கருத்தினை கொளுத்திப் போட்ட கவிஞருக்கு நன்றி! தீ பரவட்டும்!

  7. கலங்கும் விடயம் விழிப்புணர்வு தேவையே
    அனைவரும் தங்கள் சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்தாலே போதும் நாடே சுத்தமாகிவிடும்

    நல்லதலைப்பு நன்றி ரூபன் !
    தொடர வாழ்த்துக்கள்…!

  8. அன்பின் ரூபன், இந்த காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முதலில் தேவை. இதற்கு இன்னும் சரியான மருந்து கண்டு பிடிக்கவில்லை. மருத்துவ உலகம் போராடிக்கொண்டுதானிருக்கிறது இது கொசு மூலம் பரவும் காய்ச்சல் ஆதலால் சுற்றுப்புற சுகாதாரம் மிக அவசியம். எந்தக் காய்ச்சலையும் லேசாக எடுத்துக் கொள்ளாமல் தக்க சமயத்தில் மருத்துவம் பார்ப்பது அவசியம் சீக்கிரமே இதற்கான தடுப்பு மருந்துகள் உருவாக வேண்டுவோம்.

    • வணக்கம்
      ஐயா

      நீங்கள் சொல்வது சரிதான் ஐயா. இன்னும் சில வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து கண்டு பிடிக்கவிலை… இருந்தாலும் நாம் வாழும் சுற்றாடல் பகுதியை சுத்தாமாக வைத்தால் நன்றுதான்.
      தங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  9. கொசுவை ஒழிக்க ஸ்பெயினில் கண்டு பிடிக்கப் பட்ட ஆலிவ் கொசுக்களை பற்றி நானும் எழுதியது டெங்கு ஒழியவேண்டும் என்ற ஆவலில்தான் !

  10. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்( டெங்குவின் கோரவத் தாண்டவம்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    • வணக்கம்
      அண்ணா.

      பதிவு போட்டவுடன் ஓடிவந்து கருத்து போட்டிங்கள் அண்ணா … மிக்கமகிழ்ச்சியாக உள்ளது. உண்மையில் ஒவ்வொரு மனிதனும் நினைத்தால் டெங்குவை நாம் ஒழிக்கலாம்நாம் வாழும் சுற்றாடலை சுகாதாரமாக வைத்தால் சரிதான்….
      தங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s