21 comments on “காதல் கடிதங்கள்….

  1. கவிதை எழுத முயலும் உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். எழுத்துப் பிழைகளிலும் இலக்கணப் பிழைகளிலும் கவனம் செலுத்தினாற் படைப்புக்கள் இன்னமும் மெருகுபெறும்.

  2. அருமையான காதல் கவிதை.

    ஒரு ஆலோசனை. உங்களுடைய வலைச்சரத்தின் பின்னணி நிறமும் எழுத்துருவும் கண்களை மிரட்டுகின்றனவே! கண்களுக்கு இதமான நிறத்தை தெரிவு செய்தால் நன்றாக இருக்கும்.

  3. நீ இருப்பதும் வெகு தூரம்
    நான் இருப்பதும் வெகு தூரம்
    உன் நினைவு இருப்பது என் விழியோரமல்லவா
    உன் காதல் கடிதம் வருமென்று
    என் வீட்டுச் சுவரில் தொங்கி இருக்கும்
    நாட் காட்டியில்… நாட்களை
    ஒவ்வொன்றாக எண்ணியபடி…
    உன் நினைவை – என் நெஞ்சில்
    தாங்கியபடி காலம் நகருதடி…

    அருமையான வரிகள்!! நண்பரே!! கவைதை அருமை!!! காதல் மடைதிறந்த வெள்ளம் போல கொட்டும் தொனி! சத்தியமாக எந்த ஒரு காதலனும், காதலியும் இதை கண்டிப்பாக ரசித்திருப்பார்கள்! மெய்மறந்து!!!

    வாழ்த்துக்கள் அன்பரே!!

  4. எனது காதலை வெளிப்படுத்த , நானும் ஒரு காதல் கடிதம் எழுதினேன். கதைச் சுருக்கம் போல, சில வரிகளை நான் இங்கு சொல்லி விடுகிறேன்.

    நான் ஒரு பூங்காவிற்கு வழக்கமாக செல்வேன். அங்குதான் என் காதலியைக் கண்டேன். அங்கு என் காதலை வெளிப்படுத்த, நான் எழுதிய காதல் கடிதம் இதுதான்.

    எனது வலைத்தளத்தில், நீங்கள் அதைக் காணலாம்!

    http://nellaibaskar.blogspot.in/2013/05/blog-post_8583.html

  5. வணக்கம்…! புதிய வலைத்தளம் சிறக்க வாழ்த்துக்கள்….!

    காதல் மௌனம் காக்க
    கவிதை மௌனத்தை நீக்கிறது
    மெல்ல மெல்ல துன்பத்தை போக்கிறது…!

    வெகு தூரம் இருந்தாலும் விழியோரம் நின்று
    வதைக்கிறாளோ அந்த வனிதை. வரிகள் அழகாக வேதனையை விளம்பின.
    தொடர வாழ்த்துக்கள்….!

    ஏற்கனவே இட்ட கருத்து வரவில்லையே
    நேற்று கருத்து இடவும் விடவில்லை.

  6. காதல் கவிதை அனைத்தும் அருமையாக இருக்கிறது ரூபன்.
    காதலின் அவஸ்தையை அழகாய் படம் பிடித்து விட்டீர்கள்.
    மிக ரம்யமான கவிதை.
    உங்களைத் தொடர்கிறேன்.

  7. “காதல் கடிதம்” என்று படித்தவுடன் சட்டென்று ஞாபகம் வந்த திரையிசை வரிகள் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்…!

    1. நான் அனுப்புவது கடிதம் அல்ல‌
    2. காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு.(படம்: சேரன் சோழன் பாண்டியன்)
    3. காதல் கடிதம் தீட்டவே மேகமெல்லாம் காகிதம் !
    4. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே !

  8. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(காதல் கடிதங்கள்)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    • அருமை நண்பா உன் தனிமையின் வேதனை இரவுக்கும் பகலுக்குமான அந்த புரட்ச்சிக்கும் வாழ்த்துக்கள் நீ வாழ்க உன் அந்த காதல் பூங்கெடியுடன் எமது ஈர்சிலம்பதியாழ் துணை

PSD Prasad -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி