ஆயிரம் தீபங்கள் ஏற்றும் நம்
தமிழர் கூட்டமே…
அன்பு மொழி பேச்சில் அகில உலகமே குளிருதையா
மழலைச் செல்வங்கள் நம் விட்டு வாசலின்
முற்றத்தில் புத்தாடை அணிந்து
பலகாரம் உண்டு பட்டாசு கையினிலே
மனசில் மத்தாப்பூ பூத்திடவே
கொண்டாடும் எம் பிள்ளைச் செல்வங்கள்
யார் முகம் அறியாத சின்னஞ்சிறு பிஞ்சுகள்
பால் வடியும் வெள்ளை முகம்
பார்த்தால் பரவசம் அடைந்திடவோம்
வெள்ளை உடையும் அணிந்து
பள்ளிக்கு போகும் சின்னஞ்சிறு-சிறுமிகள்
பாதி வழியினிலே பாழ் பட்ட பாவிகள்
உடன் பிறப்புடன் பிறவாத
கல் நெஞ்சு கொண்ட கயவர்கள் கூட்டம்
வெள்ளையுடையில் இரத்தக் கறையும் படியும்படி
உயிரை மாய்த்து மாய்த்து காம இச்சையை தீர்க்கும்
செய்திகள் உலகெங்கும் அரங்கேறுகிறது
எம் தமிழ் நெஞ்சங்களை அழவைக்கிறது-அந்த
கயவர்கள் உயிரை காவு கொல்வாயா-
தீபாவளி நன்னாளில்-நரகாசூரா…!
உனக்கு ஆயிரம் தீபங்கள் ஏற்றிடுவோம்
நம் தமிழர்கள் கூட்டம்…
தீபாவளிக்கான கடும் புயலும் மழையும் கவிதையாக பொழிவதற்கு இணையத்தள உறவுகளுக்கு இன்னும் 14 நாட்களின் விளிம்பில் இருக்கிறார்கள்… பலஇணைத்தள உறவுகள் கேட்டதற்கிணங்க போட்டிக்கான காலம் 31.10.2013 என்று நீடிக்கப்பட்டுள்ளது…
ஏன் இப்படிப்பட்ட போட்டி வேண்டும் என்ற எண்ணங்கள் எழலாம்… சொல்கிறேன்… போட்டியை நடத்துவதன் மூலம் பல இணையத்தள உறவுகளிடம் உள்ள இலைமறை காயாக இருக்கிற திறமைகள் வெளிப்படுத்தும் நோக்கம் தான்… ஊன்று கோலின் உதவியுடன் நடக்கும் மனிதனை சொந்த காலில் நடக்கவைப்பதுபோல… நன்றி…
நானும் என்னுடைய தனபால் அண்ணாவும் தொலைபேசியில் பேசி ஒரு முடிவு எடுத்தோம். அதன் விளைவுதான் :
ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி
கவிதை எழுதுங்கள்… பரிசு அள்ளிச் செல்லுங்கள்…
போட்டிக்கான தலைப்பு :
1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி
போட்டியின் விதிமுறைகள் :
1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.
2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. கவிதையினை தங்கள் தளத்தில் 310/10/2013 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com & dindiguldhanabalan@yahoo.com
நடுவர்கள் :
திரு. ரமணி ஐயா அவர்கள் (yaathoramani.blogspot.in)
திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் (ranjaninarayanan.wordpress.com)
திருமதி. தென்றல் சசிகலா அவர்கள் (veesuthendral.blogspot.in)
திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்கள் (2008rupan.wordpress.com)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதையும் அழகு. அதைச் சொல்லிய விதம் அதைவிட அழகு.
அன்புடன்
நராகாசுரன் ஒழிந்தான் என்றுதான் தீபாவளி கொண்டாடுகிறார்கள். நீங்களோ புதுமையாக நரகாசுரனை விழித்தெழ சொல்கிறீர்கள். கயவர்களை ஒழிக்க கயவனே துணைபுரிவானா?
உணர்ச்சிக் கவிதை!
வணக்கம்
ஐயா
தங்களின் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது.
மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
“..வெள்ளையுடையில் இரத்தக் கறையும் படியும்படி
உயிரை மாய்த்து மாய்த்து ..”
இக் கொடுமையை
கடும் கவிக் கோலால்
துவைத்தெடுக்கும்
கவிதை அருமை.
வணக்கம்
ஐயா
வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான தீபாவளி கவிதை…
வாழ்த்துக்கள்…
வணக்கம்
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடுமையான கவிதை . வாழ்த்து. போட்டியாளர்களிற்கு இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
சகோதரி
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புள்ள ரூபன்
உங்களின் கவிதைப்போட்டி நல்மான ஒன்று.
பலரின் திறமை வெளிக்காட்டமுடியாத சூழல்கள் உண்டு. சிலர் திறமையிருந்தும் அறியாதிருப்பார்கள். எப்படியாயினும் இன்னும் பல திறமையான பதிவர்களை வலைப்பக்கம் மலரச் செய்ய வலைவீசியிருக்கிறீர்கள். நிச்சயம் பொன்மீன்கள் சிக்கும்.
வாழ்த்துக்கள் ரூபன்.
வணக்கம்
ஐயா
தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஒழிந்து கிடக்கும் திறமைகளை அவைக்கு அழைத்துவரத்தான் இந்த செயற்பாடு ஐயா… மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம்
சே.குமார்(அண்ணா)
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோததருக்கு வணக்கம்
போட்டிக்கான நாள் நீட்டிப்புக்கும், சமூக நோக்கம் கொண்ட கவிதைக்கும் நன்றி. போட்டியை ஏன் நடத்த வேண்டும் என்பதை விளக்கியதும் சிறப்பு. போட்டியை நடத்தும் தங்களுக்கு நன்றிகள். கலந்து கொள்ளும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.
வணக்கம்
சகோ..
உங்களின் வருகையும் கருத்தும் கண்டு உவகை கொண்டேன் சிறப்பித்து சொன்னீர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள் கூறிய விதம் நன்று …. நன்றி(சகோதரன்)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நரகாசுரனை ஏன் மீண்டும் விழித்திடச் சொல்கின்றீர்களெனத்
துணுக்குற்றேன் முதலில் நான்…
கவிதையை வாசிக்க வாசிக்க ஆம் உங்கள் கருத்துக்கு
மாற்றுக்கருத்தே இல்லை.. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்
வஞ்சகரை வஞ்சத்தால்தான் வீழ்த்த வேண்டும் எனப் புரிந்துகொண்டேன்.
அருமையான கவி படைத்தீர்கள்!
சகோ!..
தமிழ்த்தாயை,.. உங்கள் கவிதைத் தாகம் – இப்போட்டி நிகழ்வு –
திறம்பட நடந்திடப் போதிய திடமும் பக்கபலமுமாய்
உங்களுடன் இருந்தருள் செய வேண்டி வணங்குகிறேன்!
வாழ்த்துக்கள்!
வணக்கம்
சகோதரி
உங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன் கவிதையின் கருத்தை நன்றாக அறிந்துள்ளீர்கள் அதற்கு கருத்து மடல் இட்ட விதம் நன்று நன்றி சகோதரி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லதொரு கவிதை தந்து நீங்கள் ஏற்று நடத்தும் கவிதைப் போட்டியைப் பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது, ரூபன். உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்.
வணக்கம்
அம்மா வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நரகாசுர [வில்ல]னை வதம் செய்ய அழைப்பது நெருடலாகத்தான் உள்ளது!
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான நினைவூட்டுப் பதிவாக
உள்ளதால் இதையே நானும்
கூகுள் பிளஸ்ஸில் பகிர்ந்துள்ளேன்
வாழ்த்துக்களுடன்……
வணக்கம்
ஐயா
அப்படியே செய்யுங்கள் ஐயா…..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழமான கருத்துடன் கூடிய
அற்புதமான கவிதைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
உங்களின் வருகையால் மிகவும் உவகை கொண்டேன் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை இது ஈர்சிலம்பதியாழ்அருளால் என் கவியே நீ பல்லாண்டு வாழ்க
வணக்கம்
முரளி அத்தான் உங்களின் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது… வாருங்கள் தொடர்ந்து…. ஈர்சிலம்ம் பதி இறைவி என்றும் துணை …..அத்தான் வாழ்த்துக்கு மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான தீபாவளி கவிதை…
வாழ்த்துக்கள் அண்ணா…
வணக்கம்
தம்பி
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி தம்பி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆயிரம் தீபங்கள் ஏற்றிடுவோம்
வாழ்த்துகள்..!
வணக்கம்
அம்மா
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது… நன்றிகள் பல
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நெஞ்சம் குமுறச்செய்யும் வார்த்தைகளுடன்
நரகாசூரா காவுகொள்ள வருவாயா என வேண்டிய விதமும்
அருமை..
காவு கொண்டவன் நரகாசூரன்..
அவனையே இங்கு நாசவேலைகள் செய்யும்
மாமிச பிண்டங்களை அழித்து ஒழித்திட
அழைப்பது சிறப்பு…
வாழ்த்துக்கள்..
வணக்கம்
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதையும், அதை பகிர்ந்த விதமும் அழகு, அருமை… பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…
வணக்கம்
அண்ணா
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(நரகாசூரா…!விழித்தெழு…!)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-