25 comments on “அன்பே நீ அறிவாயாக

  1. கவிதை மிக நன்று ரூபன்-

    ”..கற்றுக் கொடுத்தனி –நீ அல்லவா..” – , இதை 3 சொற்களில்
    கற்றுக் கொடுத்தது நீயல்லவா! – என்றும் எழுத முடியும்.
    கற்றுக் கொடுத்தனி – பேச்சுத் தமிழ் என்று எண்ணுகிறேன்.
    இனிய வhழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

  2. ஆழமாய் நேசித்து
    அன்பினில் புதைந்து
    உம்மில் கலந்தவளை
    உணர்வெல்லாம் ஆனவளை
    தாங்கிடச் சொல்லாதீர்
    தாங்கமாட்டாள் இப்படியொன்றை
    தாங்கிடும் மனதின்
    திரம் பார்க்க எண்ணாதீர்…
    எப்படிப் புதைப்பாள்
    உடலோடு உணர்வினையும்….

    உங்கள் கவி அருமை சகோ!

    வாசிக்கையில் இறுதி வரிகளை கற்பனையில்கூட
    என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை…
    பொறுமைக்கு பெண் உதாரணம் என்பதற்காக
    உற்ற துணையிழந்து தவிக்கும் பொறுமை கொடுமை!

    வாழ்த்துக்கள் சகோ!

  3. *****நான் உன்னை விட்டுப் பிரிந்து போனாலும்
    என் வித்துடல் தாங்கிய விதை குழியை
    நிறப்ப உன் பாதச்சுவடு பட்ட
    மண்ணினால் மட்டும் முடியும்
    என்பதை நீ அறிவாயக. *****

    காதலின் ஆழத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது கவிதை.. பாராட்டுக்கள்… மகிழ்ச்சி..! பகிர்வினிற்கு மிக்க நன்றி.

    எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய “CCleaner” மென்பொருள்

  4. அனபின் ஆழத்தைச் சொல்லிப்
    போனவிதம் அருமை
    இசைப்பாடல் போல அமைந்த கவிதையின்
    லயம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  5. //வாழ்க்கை என்பது ஒருமுறை
    அதை மகிழ்ச்சியாக வாழ
    கற்றுக் கொடுத்த // அந்த அன்பிற்குரியவளை எப்படி மறப்பது? அவள் திட்ட்னாலும் பொறுத்துக் கொள்ளும் உங்களை நிச்சயம் புரிந்து கொள்வாள்.
    பாராட்டுக்கள்!

  6. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(அன்பே நீ அறிவாயாக)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s