என்னவளே என்னவளே
உன் நினைவுதான் எனக்கு
இரவின்ஒளி வட்டம்
அந்த ஒளி வட்டந்தான்-கனவுகளின்
அலையோசையில் –நான்
தினம் தினம் உயிர் வாழ்கிறேன்
நான் உயிரோடு வாழும் –வரை
உன் நினைவும் உயிரோடு வாழும்
மலர்களின் சிரிப்பு ஒருநாளில்-இறந்துவிடும்
அதன் மணமும் ஒரு நாளில் போய்விடும்
நிலா உதித்த நாளிகையில் –இருந்து
மறையும் நாளிகை வரை –வெளிச்சம் கொடுக்கும்
உனக்காக நான் தினம் தினம் –கவிதை வரைவேன்
என் உயிர் மூச்சு இருக்கும்-வரை
சூரியனின் தனியாத வெம்மையும்
திசைகள் மாறி மாறி வீசும் சுழல் காற்றும்
வானமே கண்ணீர் வடிக்கிறது
இற்கையே என் நிலையைக் கண்டு
அனுதாபம் செய்யுதடி………….
நீ ஏன் என்னை விட்டு விட்டு தள்ளிப் –போகிறாய்
உன்னை நினைத்துப் பார்க்கும்-போது
இணைய வானில் விரிந்து
பறந்தது என் கவிதையானது
விரிந்து பறந்த கவிதையில்-கலந்திருப்பது
உன் மீது கொண்ட எல்லையில்ல-காதல்தானடி
என்னவளே…என்னவளே இன்னும் ஏன்
தள்ளிப் போகிறாய்……..
–
நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-