வணக்கம் நண்பர்களே… இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்… வாருங்கள்… வாருங்கள்…
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தை தாய்வீடாக கொண்ட எனது இனிய நண்பர் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்கள் இந்தப் போட்டியை நடத்த வேண்டும் என்று ஒரு மாதமாக மலேசியாவிலிருந்து தொடர்பு கொண்டு பல முறை பேசினார்… பதிவர் திருவிழா முடிந்தவுடன் ஆரம்பித்து விட்டோம் :
போட்டிக்கான தலைப்பு
1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி
போட்டியின் விமுறைகள் :
1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.
2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. கவிதையினை தங்கள் பதிவில் 31/10/2013 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com& amp; dindiguldhanabalan@yahoo.com
நடுவர்கள் :
திரு. ரமணி ஐயா அவர்கள் (yaathoramani.blogspot.in)
திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் (ranjaninarayanan.wordpress.com)
திருமதி.தென்றல் சசிகலா அவர்கள்(veesuthendral.blogspot.in)
திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்கள் (2008rupan.wordpress.com)
நாம் சிரித்தால் தீபாவளி தலைப்பில் ஒரு பள்ளிக் குழந்தையின் கவிதை :
ஒளியின் நாளாம் தீபாவளித் திருநாளில் பட்டாசின் ஒலி எதற்கு ?
பண்பாடு மிக்க தமிழகத்தில் பட்டாசின் சப்தம் எதற்கு ?
பாதுகாக்கும் ஓசோனில் பாதிப்பைப் பதிய வைக்கும் பட்டாசு எதற்கு ?
பிஞ்சுக் குழந்தைகளின் கையில் வடுக்களை வழங்கும் வெடி எதற்கு ?
தூய்மையான காற்றிற்கு துன்பத்தை உருவாக்கும் பட்டாசு எதற்கு ?
உயிர் தேசத்தை ஏற்படுத்தும் உபயோகமில்லாத பட்டாசு எதற்கு ?
உன்னதமான திருநாளை உருக்குலைக்கும் பட்டாசு எதற்கு ?
கவலையற்ற திருநாளில் காசை வீணாக்கும் பட்டாசு எதற்கு ?
நேசமுள்ள திருநாளில் நோயைப் பரப்பும் பட்டாசு எதற்கு ?
உன்னதத்தை உடைத்தெறியும் உணர்வற்ற பட்டாசு எதற்கு ?
பாரதத் திருநாட்டில் பாதிப்பை உண்டாக்கும் பட்டாசு எதற்கு ?
வசந்தமிகு தீபாவளியில் வன்முறையை வளர்க்கும் பட்டாசு எதற்கு ?
திருந்துவோம் ! திருத்துவோம் ! உணர்வோம் ! உணர்த்துவோம் !
சிரிப்பே மத்தாப்பு – அதுவே தீபாவளியின் முத்தாப்பு !
பரிசுகள் :
முதல் பரிசு : ரூ.1500 + சான்றிதழ்
இரண்டாம் பரிசு : ரூ.1000 + சான்றிதழ்
மூன்றாம் பரிசு : ரூ.500 + சான்றிதழ்
ஆறுதல் பரிசாக தேர்வு செய்யப்படும் ஏழு கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்… கலந்து கொள்பவர்கள் தங்களின் பெயர்,மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரிகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்…
வெல்லுங்கள்…! பரிசு அள்ளிச் செல்லுங்கள்…!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திரு.ரூபன்,
வராத ஒன்றில் போட்டி வைத்துள்ளீர்கள். பங்குகொள்ளத்தான் முடியாது, ஆனால் பார்வையாளராக கலந்துகொள்வேன்.
நல்ல முயற்சி,போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
வணக்கம்
மனிதனால் முடியாதது ஏதும் இல்லை முடியும் சிறப்பான கவிதை பின்பு தளத்தில் பதியப்படும் படித்து மகிழுங்கள்
கருத்துக்கு மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஐயா! என் கவிதையை பார்த்திருப்பீர்கள். காலையில் அலுவலகம் செல்ல நேரமானதால் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்ப மறந்துவிட்டேன். தாங்களே பார்த்துவிட்டதால் அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் விதிமுறைப்படி மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டுமென்றால் அனுப்பிவிடுகிறேன். நன்றி.
பிங்குபாக்: துரத்தும் பதவி! | ranjani narayanan
பாராட்டத்தக்க செயல்…
படைப்போரை ஊக்கப்படுத்தும் செயல்…
மனமுவந்த வாழ்த்துக்கள் நண்பரே…
வணக்கம்
மகேந்திர (அண்ணா)
உங்களின் திறந்த மனதுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த கவிதைப் போட்டி படைப்பாளிகளை ஊக்கிவிக்கும்.
கவிதைப் போட்டியில் நானும் கலந்துகொள்கிறேன். விரைவிலேயே கவிதை எழுதி தளத்தில் இட்டுவிட்டு உங்களுக்கு அனுப்புகிறேன்.
வணக்கம்
உங்களின் கருத்தை பார்த்ததும் மிக சந்தோசமாக உள்ளது…. கவிதை எழுதுங்கள் பரிசை அள்ளிச் செல்லுங்கள் ..நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நலமா????
நீண்ட நாட்களாக காண இயலவில்லை…
வணக்கம்
தம்பி
பல நாட்கள் என்னை கானாமல் தள்ளாடிய என் உள்ளமே
உன் பாசம் எவ்வளவு பெரிதென்று அறிந்தேன்.உன் கருத்தாடலில்
மிக விரைவில் புதிய பதிவில் சந்திக்கிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த முயற்சி என்பதை விட
சிறந்த பணி என்பதே
என் கருத்து.
இதனால்
சிறந்த படைப்பை
சிறந்த படைப்பாளரை
அடையாளப்படுத்த இடமுண்டு!
இப்பணியில் இறங்கிய
தங்களுக்கு
எனது பாராட்டுகள்!
வாழ்த்துகள்!!
பா புனையும் மலைகளுடன்
சிற்றெறும்பு – நான்
போட்டியில் கலந்து கொண்டு
தோல்வி தான் காண்பேன்…
ஆயினும்,
போட்டியில் கலந்து கொள்கிறேன்!
பெயர்: யாழ்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)
மின்னஞ்சல்: yarlpavanan@hotmail.com
வலைப் பூ: http://eluththugal.blogspot.com/
வணக்கம்
யாழ்பாவாணன் (அண்ணா)
தங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் கவிதைப் போட்டியில் நீங்கள் கலந்து கொள்வது மிக மகிழ்ச்சியாக உள்ளது..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன-
எனக்கு கவிதை வா என்றால் வராது,போ என்றாலும் போகாது, தீபாவளி கழித்து கவிதை வருகிறதா? என்று பார்க்கலாம்
வணக்கம்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
என்னதான் செய்வது …..கட்டாயம் வெற்றிக் கவிதைகள் என் இணையப்பக்கம் பார்கலாம் தீபாவளிக்கு இடையில்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர்களை ஊக்குவிக்கும் இந்த போட்டி பாராட்டப்படவேண்டியது தான், ஆனால் திரு. ரூபன் அவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழராக இருந்தால், இந்தப் பரிசுத் தொகையின் அளவு மிகவும் குறைவு என்பது தான் என்னுடைய தாழ்மையான கருத்து. :))
பிங்குபாக்: ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
எனக்குக் கவிதைப் போட்டியில் ஆர்வமில்லை. பார்க்கலாம்.
முயற்சிக்கு வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
பாராட்டத்தக்க நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
கருத்துக்கு மிக நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன-
-ரூபன்-
வணக்கம் அண்ணா…
நீண்ட நாள் கழித்து தங்கள் தளம் வந்துள்ளேன், இடையில் இணைய பிரச்சனை. அதான் இந்தப் பக்கம் வர முடியல…
மிக்க மகிழ்ச்சி, தங்கள் போட்டி வெற்றியடைய வாழ்த்துகள்… நானும் கலந்துகொள்கிறேன், தங்கள் முயற்சி மிக்க பாராட்டத்தக்கது… பாராட்டுகள் அண்ணா…
வணக்கம்
வெற்றிவேல்
உங்களின் கருத்தை பார்த்து மிக சந்தோசம் அடைந்தேன் நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர்களுக்கு கொண்டாட்டம்தான். நல்ல அறிவிப்பு பாராட்டுக்கள் ரூபன். கவிமழை பொழிய இருக்கிறது. நனையக் காத்திருக்கிறோம்.
வணக்கம்
முரளி(அண்ணா)
உண்மையில் கவிஞர்களுக்கு கொண்டாட்டம்தான் உங்களின் கருத்தை பார்த்து மிக சந்தோசம் அடைந்தேன் நன்றி அண்ணா
கட்டாயம் நீங்களும் பங்குகொள்ள வேண்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்,
நல்ல அறிவிப்பு. கவிதை புனைபவர்க்கு ஊக்கம் தரும் உங்கள் இந்த அறிவிப்பு.
வெற்றி பெறப்போகும் மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…
நட்புடன்,
நடராஜன் வி.
வணக்கம்
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி நீங்களும் பங்குகொள்ளவும் நிச்சயம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான நல்ல ஊக்குவிப்பு முயற்சி சகோதரரே!
போட்டி சிறப்புற அமையவும்,
பங்கேற்கும் கவிஞர்களுக்கும், நடுவர்களும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
பகிர்வினுக்கு உங்களுக்கும் என் நன்றிகள்!
வணக்கம்
சகோதரி
உங்கள் பதிலைப்பார்த்து மிக சந்தோசம் அடைந்தேன் உங்களின் வாழ்த்து மாலைகள் வெற்றி மாலையாக சூடட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்னை நடுவராக ஆக்கியதற்கு நன்றி ரூபன்.
கவிதைப்போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
வணக்கம்
அம்மா
நீங்கள் நடுவராக உள்ளது எனக்கும் மாபெரும் சந்தோசமாக உள்ளது
நான் பல தடவை பேசியபோது. நல்ல அறிவுரைகளையும் பல கருத்துக்களையும் சொல்லியமைக்கு நான் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். கவிதைப் போட்டி வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்தியமைக்கு மிக நன்றி அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள் நானும் பங்குகொள்கிறேன்
வணக்கம்
தகவல் தந்தமைக்கு மிக நன்றி நிச்சயம் பங்குகொள்ளவேண்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகவும் அழகாக வந்துள்ளது… எனது இனிய நண்பருக்கு நன்றிகள் பல… நல்வாழ்த்துக்களும்…
வணக்கம்
தனபால்(அண்ணா)
கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றி அண்ணா நமது பணி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
தீபாவளிச் சிறப்பு கவிதைப் போட்டி நடைபெற இருப்பதால் உங்கள் கவிதைகளை எழுதி அனுப்புங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-