
திகட்டாத உன் பார்வையும்
தித்திக்கும் உன் மேனியும்
எனக்காக பிறந்தவளே…
உன்னை நினைத்து நினைத்து
இரவும் பகலும்
என்னுள்ளம் தினம்தினம் தித்திக்குதே! பணமிருந்தும்படிப்பிருந்தும்
என் உறவுகள் என்னை
சொந்தம் இல்லை என்று
என்னைக் கை கழுவி விட்டதடி
பெற்றவர்கள் என்னை மதித்தார்கள்
நம் செய்தி காதுக்கு எட்டியதும்
அவர்களும் என்னை மறந்தார்கள்
தூக்கியெறிந்தார்கள்!
போனது போகட்டும்மென்று
தினம் தினம் உன்நினைவுதான்-எனக்கு!
என் மேனிக்கு வசந்தகால காற்றாக -வீசுதடி
உன் நினைப்பு! துள்ளிஓடும் மீனுக்கு
தண்ணீர்தான் சொந்தமடி
அது தரைக்கு வந்தால்
மரணம்தான் அதற்குச்- சொந்தமடி
நான் வாழ்ந்தாலும்
நான் மரணம் அடைந்தாலும்
என் இதயத்தில் – உன் நினைவு
எப்போதும் நிழற்படமாய்
நிலைத்திருக்கும்…!
இதை நீ அறிவாயா??
என் அன்புக்குரியவளே
தினம்தினம் உன்நினைவுதான்
தினம் தினம் தித்திக்குதே…! -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தூய காதலின் தூய மனநிலையைச் சொல்லிப்போகும்
கவிதை அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
உங்களின் வருகையும்கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது மிக நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனது முழுவதும் தித்திப்பு…!
வாழ்த்துக்கள் ரூபன் அவர்களே….
வணக்கம்
தனபால்(அண்ணா)
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தித்திக்குதே உங்கள் கவி தித்திக்குதே
வித்திட்ட விதைகூட விருட்டென முளைவிட்டு
சுத்திக்குமே! பாவலரே தொற்றிக்குமே!
அருமை… ரசித்தேன் சகோ!
வாழ்த்துக்கள்!
வணக்கம்
இளமதி
அழகுற கவிதையால் பின்னூட்டம் இட்ட
தையலே உன் கருத்தை கண்டு மும்மடங்கு
மகிழ்ச்சி அடைந்தேன்-தையலே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தித்திக்குதே…தித்திக்குதே…!)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-