
திகட்டாத உன் பார்வையும்
தித்திக்கும் உன் மேனியும்
எனக்காக பிறந்தவளே…
உன்னை நினைத்து நினைத்து
இரவும் பகலும்
என்னுள்ளம் தினம்தினம் தித்திக்குதே! பணமிருந்தும்படிப்பிருந்தும்
என் உறவுகள் என்னை
சொந்தம் இல்லை என்று
என்னைக் கை கழுவி விட்டதடி
பெற்றவர்கள் என்னை மதித்தார்கள்
நம் செய்தி காதுக்கு எட்டியதும்
அவர்களும் என்னை மறந்தார்கள்
தூக்கியெறிந்தார்கள்!
போனது போகட்டும்மென்று
தினம் தினம் உன்நினைவுதான்-எனக்கு!
என் மேனிக்கு வசந்தகால காற்றாக -வீசுதடி
உன் நினைப்பு! துள்ளிஓடும் மீனுக்கு
தண்ணீர்தான் சொந்தமடி
அது தரைக்கு வந்தால்
மரணம்தான் அதற்குச்- சொந்தமடி
நான் வாழ்ந்தாலும்
நான் மரணம் அடைந்தாலும்
என் இதயத்தில் – உன் நினைவு
எப்போதும் நிழற்படமாய்
நிலைத்திருக்கும்…!
இதை நீ அறிவாயா??
என் அன்புக்குரியவளே
தினம்தினம் உன்நினைவுதான்
தினம் தினம் தித்திக்குதே…! -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-