ஊர் உறங்கும் சாமத்தில்
உறவையும் அறுத்துவிட்டு
உயிரோடு மீண்டும் வருவோமா?-என்ற
மனக் குமுறலின் நீரோட்டத்தில்
மனம் தளராமல் கடலுக்கு போறவனே
தாய் மண்ணில் பிறந்தவனே-உன்
தாய் திரு நாட்டுக் கடலினிலே
அன்னியவன் கைவரிசை-மேல் ஓங்கி
உன் அங்கமெல்லாம் வலிக்க
கைவீங்க கால்வீங்க கரைசேரும்-இதயங்கலே
எப்போது விடிவுகாலம் பிறக்கும்-உன்வாழ்வில்
கரையோரத் தமிழகமே-நீ
கொந்தளித்து எழுந்தாலும்-நீ
மலைபோல உயர்தாலும்
உன்பாட்டை இரசிக்கமாட்டான் உன்நாட்டு –அரசன்
கல்மனம் படைத்த நயவஞ்சகனின்
சதிவலையில் சிக்குண்டு
சிறைவாழும் எம் மீனவனே
உன் குடும்பம் வறுமைச் சிறையில் வாடுதையா
விலங்கு கையில் மாட்டி
சிறையில் வாடும் மீனவனே
உன் நினைவால் துவண்டு துவண்டு
அழுகிறது உன் உறவுகள்
கடல் நீ உப்பு ஆனது அதனாலே
காலம் மாறியது அதனாலே
மீனவனே உனக்கு நடக்கும்
கொடுமையினை தட்டிக் கேட்க –யாரும் இல்லையா??
இல்லை நீ தமிழனா பிறந்தது குற்றமா???
சொந்தக் கதையும் சோகக் கதையும்
தன்னகத்தே சொல்லிக் கொண்டு வாழும்-மீனவனே
உனக்கு எப்போது விடிவுகாலம் –பிறக்கும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(எப்போது விடிவு காலம் பிறக்கும்)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
மீனவர்களின் துயரம் சொல்லி மாளாது
உணிரோட்டமுள்ள நல்ல கவிதை
வணக்கம்
ஐயா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது. நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன-
-ரூபன்-
தமிழக மீனவர் துயரம்
எண்ணிவிட முடியாது தொடர
ஆண்டவனும்
பார்த்துக்கொண்டிருப்பது தான்
வேடிக்கை ஆயிற்றே!
வணக்கம்
உங்கள்கருத்தும் வருகையும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீனவர்களின் துயரங்களை உருக்கமாக கவிதையில் வடித்துள்ளீர்கள்! வலி நிறைந்த கவிதை!
அவர்களின் வாழ்வில் விடியல் பிறக்கட்டும்!!
வணக்கம்
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீனவர்களின் துயர் விரைவில் நீங்கி, கடல் நீரின் உப்பு தன்மை மேலும் கூடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்!!
வணக்கம்
சகோதரி
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நாட்டு நடப்பு நன்கு சொல்லப் பட்டு உள்ளது.
மக்களின் துன்பம் வடிந்து ஒளி பிறக்கட்டும்.
விடியட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
சகோதரி
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சொந்தக் கதையும் சோகக் கதையும்….
புரிகிறது ரூபன் அவர்களே… தொடர வாழ்த்துக்கள்…
வணக்கம்
தனபால்(அண்ணா)
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒவ்வொரு முறை மீனவர்களின் நிலை பற்றி அறியும்போதும் ஏற்படும் மன வேதனையை கவிதை வரிகளாக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள், ரூபன்.
வாழ்த்துக்கள்!
வணக்கம்
அம்மா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(எப்போது விடிவு காலம் பிறக்கும்)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-