ஊர் உறங்கும் சாமத்தில்
உறவையும் அறுத்துவிட்டு
உயிரோடு மீண்டும் வருவோமா?-என்ற
மனக் குமுறலின் நீரோட்டத்தில்
மனம் தளராமல் கடலுக்கு போறவனே
தாய் மண்ணில் பிறந்தவனே-உன்
தாய் திரு நாட்டுக் கடலினிலே
அன்னியவன் கைவரிசை-மேல் ஓங்கி
உன் அங்கமெல்லாம் வலிக்க
கைவீங்க கால்வீங்க கரைசேரும்-இதயங்கலே
எப்போது விடிவுகாலம் பிறக்கும்-உன்வாழ்வில்
கரையோரத் தமிழகமே-நீ
கொந்தளித்து எழுந்தாலும்-நீ
மலைபோல உயர்தாலும்
உன்பாட்டை இரசிக்கமாட்டான் உன்நாட்டு –அரசன்
கல்மனம் படைத்த நயவஞ்சகனின்
சதிவலையில் சிக்குண்டு
சிறைவாழும் எம் மீனவனே
உன் குடும்பம் வறுமைச் சிறையில் வாடுதையா
விலங்கு கையில் மாட்டி
சிறையில் வாடும் மீனவனே
உன் நினைவால் துவண்டு துவண்டு
அழுகிறது உன் உறவுகள்
கடல் நீ உப்பு ஆனது அதனாலே
காலம் மாறியது அதனாலே
மீனவனே உனக்கு நடக்கும்
கொடுமையினை தட்டிக் கேட்க –யாரும் இல்லையா??
இல்லை நீ தமிழனா பிறந்தது குற்றமா???
சொந்தக் கதையும் சோகக் கதையும்
தன்னகத்தே சொல்லிக் கொண்டு வாழும்-மீனவனே
உனக்கு எப்போது விடிவுகாலம் –பிறக்கும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாலி மறைந்தார்என்ற சோகச் செய்திதமிழ்கள் உள்ளங்களில்பேர் இடி இடித்ததுஎரிந்த விளக்குகள் அனைந்ததுகவிதையின் உயிர் மூச்சுநின்று போனதுஅரை றூற்றாண்டு தாண்டிகவிதையென்றும்திரைப்படப் பாடல்கள் என்றும்காதுக்கு இனிமையை-அள்ளிக் கொடுத்தகவிதையின் காவியநாயகனேஉன்மறைவு எங்களுக்குஆறாத துயரமாய் தள்ளாடுதுபாட்டுத் தலைவனேஉன் பாட்டுக்கு யாவரும்-அடிமைதான்பாரினில் உன்னைப் போல்-ஒருபாவலன்யாரும் இல்லை என்ற மனஏக்கம்தமிழர்கள் உள்ளங்களில் அலைபாயுதுபாட்டுக்கு பாட்டென்றும்கவிக்கு கவியென்றும்உலக அரங்கில் சிறகடித்துப் -பறந்தாயேஉன் பாட்டுக்கும் உன் கவிதைக்கும்சிறைப்பட்ட உள்ளங்களைதவியாய் தவிக்கவிட்டுமண்ணுலக வாழ்க்கை வாழ்ந்துவிண்ணுலக வாழ்க்கை வாழ்கிறாய்உன் கடசி நேரத்தில் உனக்கு வைத்தியம்பார்த்த வைத்தியனுக்கும் பாட்டெழுதி வைத்துவிட்டுசொல்லாமல் கொள்ளாமல் மறைந்தாயே-கவிஞனேஇம்மண்ணில் தமிழன் இருக்கும் வரைஎன்றென்றும் உன் தமிழ் வாழும்உன் கவிவாழும் உன் புகழ் வாழும்-நன்றி--அன்புடன்--ரூபன்-