உருண்ட தோழ்களும் முறுக்கேறிய தசைகளும் கட்டு மீசையும் சராசரியான உயரமும் கொண்டவன்தான் சின்னப்பன் அவனுக்கு அழகான மனைவி,பெயர்(ராமாயி) அழகானஒரு பெண் பிள்ளையும் அவள்தான் (இலக்கியா)
அவனுடைய சிந்தனை உணர்வுகளில் பல ஆசைகளை வளர்த்தான் அந்த ஆசைகள் சிலது நிறைவேறியது சில ஆசைகள் நிறைவேறாமல் போனதும்முண்டு தைபிறந்தால் வழி பிறக்கும் என்ற முது மொழிக்கு ஏற்ப அவனது ஊரில் உள்ள வயல் நிலங்களை நிலத்துக்கு சொந்தக்காரர்கள் தங்கள் தங்கள் நிலங்களை உழுதார்கள்
சின்னப்பனும் தன்னுடைய வயல் நிலத்தை உழுது பன்படுத்தினான் வயல் உழுதும் காலத்தில் கடலில் இருந்து தரையை நோக்கி கடல்க்காற்று வீசும் காலம் அனல் பறக்கும் வெயில் ,அந்த நிலத்தின் மண்வாசணை வீசியது சின்னப்பனின் மனதில் ஒரு நினைவலை தோன்றியது எவ்வளவு கஷ்டப்பட்டு நான் சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளிக்கும் நல்ல பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒளிச்சித்திரக் காட்சி ஓடியது மனதுக்குள்
வயலை உழுத பின் அதற்கான விதை நெல்லை வாங்க வேண்டும் தன்னிடம் பணம் இல்லாமல் போனது என்னதான் செய்வதென்று புரியாத படி கிழக்கு திசையை நோக்கிய வண்ணம் நாடியில் கை ஊன்றியபடி வீட்டுத்திண்ணையில் உக்காந்து இருந்தான்,
அந்த வேளையில் அவன் மனைவி (ராமாயி) வருகிறாள் அவள் தன்னுடைய பேச்சு மொழியில் சொல்லுகிறாள், “என்னங்க நாடியில் கை ஊன்றியபடி எதைப் பற்றி யோசிக்கிறிங்கள் என்று அவன் மனைவி கேட்டாள்,”
இல்ல ராமாயி இருக்கிற பணத்த வச்சி நம்மட வயல் நிலத்தை உழுதாச்சி வயல் விதைப்பும் நெருங்கி வருது விதை நெல் வேண்டப்பணம் இல்ல ராமாயி என்று தழுதழுத்த குரலில் பேசினான்
சில நாட்கள் கழிந்து விட்டது பக்கத்து வயல் காரர்கள் எல்லோரும் விதைத்து விட்டாங்கள் நம்மட வயல் மட்டுந்தான் விதைக்காமல் அப்படி கிடக்குது ராமாயி என்று தன் மனைவியிடம்பதில் கூறினான்
சரி ராமாயி நீ மகளை வீட்டில் வைத்துக் கெள் நான் என் நண்பனிடம் போய் கைமாத்தாக பணம் கேட்டுப்பாக்கிறேன் தந்தால் நல்லதுதான் அங்கு செல்லுகிறான் நண்பன் சொல்லுகிறான் மச்சான் என்னிடம் இருந்த பணம் எல்லாம் முடிந்து விட்டது என்று பதில் சொன்னான்
என்னங்க நாம எல்லோரிடமும் போய் பணம் கேட்டாள் யாரும் தந்த பாடு இல்லை என்னதான் செய்வது என்னங்க, என்னங்க என்று ராமாயி செல்லமாய் தன் கணவனை அழைக்கிறாள் அந்த வேளையில் சொல்லுகிறால் ராமாயி என் களுத்தில் கிடக்கும் (1பவுண்,ஒருபவுண்) தங்கச் சங்கிலியை நம்மட பக்கத்து வீட்டு முனியாண்டியிடம் போய் அடகு வைச்சி பணத்தை எடுத்து வாங்க என்று ராமாயி தன் கணவனிடம் அடக்கமான குரலில் சொன்னால்
உன்சிந்தனை நன்றாகத்தான் இருக்கு ஆனால் எனக்கு மனவேதனையா இருக்கு நீ கழுத்தில் ஒன்றும் இல்லாமல் இருப்பதுதான் ,என்னதான் செய்வது எல்லம் இறைவனுக்கு தொரியும் என்று பெருமூச்சுடன் சொன்னான்
சின்னப்பன் பணத்தை எடுத்து விதைநெல்லும் வேண்டியாட்சி வயலும் விதைபட்டது விதைத்து 4 வாரங்கள் ஆகி விட்டது பக்கத்து வயல் காரர்களை விட சின்னப்பனின் பயிர் மிக அருமையாக வளர்ந்திருந்தது பக்கத்து வயல் காரர்களின் கண்கள் சின்னப்பன் வயலில்தான் கண்ணாக இருந்தது வயலில் பயிர் நல்ல செழிப்பாக வளர்ந்ததும் சின்னப்பன் வீட்டில் இருப்பதில்லை ஒவ்வொரு நாளும் வயல், வயல் என்று வயலில் காலத்தை கழித்தான்,
ஒரு நாள் வயலில் இருந்து வீட்டுக்கு வந்தான் சின்னப்பன் அவன் மனைவி ராமாயி வஞ்சன மீன் கறியும் நல்ல வரட்டலும் பச்சமிளகா பொரித்தும் இருந்தது சாப்பாட்டைக் கண்டதும் சின்னப்பனுக்கு பசி வந்தது, கணவன் மனைவி மகள் ஆகிய (3பேரும் )ஒன்றாக உக்காந்து உணவு உண்டார்கள்
பின்பு தூங்கும் நேரம் வந்துவிட்டது ராமாயி படுக்கைஅறையை சுத்தம் செய்து வைத்தாள் அந்த வேளையில் ராமாயி சொல்லுகிறாள் “வயல் அறுவடைமுடிந்த பின்பு நம்மட மகளுக்கு(2பவுண்)தங்கச் சங்கிலியும் கைக்கு வளையலும் வாங்க வேண்டும்என்ற ஆசை மனதில் அலைமோதியது அதை தன் கணவனிடம் சொன்னால் அந்த ஆசையும் சின்னப்பனின் மனதில் ஒரு பக்கம் இருந்தது
வயல் விதைத்து 1 .1/2 மாதங்கள் ஆகி விட்டது பக்கத்து வயல் காரர்கள் எல்லோரும் களை பிடிங்கி வயலுக்கு உரமிட்டுக்கொண்டார்கள் சின்னப்பனும் தன்னுடைய வயலுக்கு களை பிடிங்கி உரமிட்டு நீர்பாச்சி ,இப்படியாக வேலை செய்து வயலில் பயிர் நன்கு வளர்ந்து பச்சைப் பசல் என்று காட்சி அளித்தது தென்றல் காற்று வீசும் போது வளைந்து நெளிந்து, கடல் அலைபோல காட்சி அளித்தது சின்னப்பன் மகிழ்ந்தான்
அவனுடைய வீட்டில் அன்றாடம் உண்பதற்கு உணவு இல்லை இப்படியாக வறுமை அவன் குடும்பத்தை வாட்டியது “சின்னப்பன் தன் மனதுக்குள் நினைக்கிறான் ஒரு வாரத்தில் வயல் அறுவடை செய்யலாம் இனி சோத்துப்பஞ்சம் வீட்டில் இருக்காது சந்தோசமாக இருக்கலாம் என்ற சிந்தனை துளிகள் ஓடியது,மனதில்
வயல் நன்றாக விளைந்தது ஒவ்வொரு நாளும் ராமாயி தன் வீட்டில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்து இறைவனை வணங்குவள்,அவள் இறைவனை வணங்கும் போது இறைவா நல்ல விளைச்சல் தரவேண்டும், என்று ஒவ்வொரு நாளும் வணங்குவள்,
ஒரு நாள் சின்னப்பனுக்கு தூக்கம்வர அதிகாலை 5 மணியாகி விட்டது அந்த வேளையில் கரு மேகங்கள் வானத்தில் பந்தலிட மின்னல் கீற்றுக்கள் ஒளி வீசியது வானம் பூமி அதிர இடி இடித்தது புயல்க்காற்று வீசியது கட்டுக்கடங்காமல் மழை பொழிந்தது அந்த வேளையில் உணந்து கொண்டான் தான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி செய்த வயல் அழிந்து போய் விடுமோ என்ற ஏக்கம் இருந்தது இப்படியாக 4 நாட்கள் தொடர்ச்சியாக மழை பொழிந்தது
அவனுடைய வயலில் உள்ள நெற் கதிர்களும் திசை மாறி நீரில் ஓடியது அவன் தன்னுடைய மனைவியின் ஆசையும் தன் மகளின் ஆசையும் இறுதியில் நிறைவேற்ற முடியாமல் திசைமாறி ஓடியது அவன் நினைத்த ஆசைகள் எல்லாம் திசைமாறி ஓடும் நதியைப் போல ஓடியது,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கதையென்ற உணர்வு இல்லாமல் ஒரு நிகழ்வைக் கண்டது போல் இருக்கிறது… வட்டார வழக்கில் எழுதியிருந்தால் இன்னும் ஆழமாக இருந்திருக்கும்..!!
வணக்கம்
உங்கள் முதல் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக நல்ல தகவல் சொல்லியமைக்கு மிக நன்றி தொடர்ந்து வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சோகமான முடிவு,,, யதார்த்தமான கதை மிக அருமை
அழகான படங்கள்…
வணக்கம்
வெற்றிவேல்(தம்பி)
கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எதார்த்தமான கதைக்களம். முடிவு தான் சிறிது சோகம் தருகிறது… அவனது உழைப்பு, ஆசைகள் என அனைத்தும்வீணாய் போய்விட்டது… இங்கு பலரின் வாழ்க்கைக் கதையும் இப்படித்தான் உள்ளது… நன்றாக கூறியுள்ளீர்கள்….
பாராட்டுகள், பகிர்விற்கு நன்றி…
வணக்கம்
வெற்றிவேல்(தம்பி)
உண்மையில் நடக்கும் யதார்த்த நிலையை கதையில் உணர்ந்ததை இட்டு மிக மகிழ்ச்சியடைகிறேன் கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றி,,,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அவனுடைய வயலில் உள்ள நெற் கதிர்களும் திசை மாறி நீரில் ஓடியது அவன் தன்னுடைய மனைவியின் ஆசையும் தன் மகளின் ஆசையும் இறுதியில் நிறைவேற்ற முடியாமல் திசைமாறி ஓடியது அவன் நினைத்த ஆசைகள் எல்லாம் திசைமாறி ஓடும் நதியைப் போல ஓடியது,/
கதை முடிவை படித்தவுடன் நெஞ்சம் கனத்து போனது.
தன் பாலன் சொன்னது போல் நல்ல முடிவை நீங்கள் கொடுத்து இருக்கலாம்.
தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றி இருக்கலாம்.
கதையிலாவது விவாசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கட்டுமே!
அப்படி கற்பனை செய்தால் உண்மையில் விவாசயிகள் நிலை உயரும்.
வணக்கம்
கோமதி அரசு
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது சிறுகதையில் உள்ள நேர் எதிர் கருத்துக்களை சுட்டிக் காட்டியமைக்கு மிக நன்றியும் வாழ்த்துக்களும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
சகோதரி
கருத்துக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஊருக்கே உணவளிக்கும் உழவனின் வாழ்க்கைதான் நிலை இல்லாமல் இருக்கிறது. இயற்கை காய்ந்தும் பெய்தும் அவனை வாட்டுகிறது. என்ன செய்வது. விவாசயிகளுக்கு உதவுவது நமது கடமை
வணக்கம்
முரளி(அண்ணா)
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
தனபால்(அண்ணா)
உங்கள் முதல் வருகையும் முதல் கருத்தும் மிக சந்தோசத்தை தந்தள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(திசைமாறிய ஆசைகள் )
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(சிறுகதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீங்கள் நினைத்தால் திசையை மாற்றலாம்… நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நல்லது… நன்றி…