பள்ளிக் காலங்களில்
பரீட்சைகள் முடிந்தது
சொந்தங்களைப் பார்க்க
வலிகள் தாங்கிய-இதயத்தை
மெதுவாக-தாங்கிய படி
புயல்காற்று மனதுக்குள்-வீசியதுபோல
வீதியை நோக்கி வருகிறேன்
பேருந்தில் ஏறுவதற்கு-வந்தது பேருந்து
இருக்கை இல்லாமல் கால்கள் வலிக்க வலிக்க
நின்ற நிலையில் பயணிந்த போது
ஓர் இருக்கையில் அழகிய இளம்பெண்-அமர்ந்திருந்தாள்
அந்த இருக்கையின் அருகே
நானும் அமர்ந்தேன் ஒன்றாக பயணித்தேன்
சில நிமிடங்கள் சில மணித்தியாலயங்கள்
அவள் பேசாமல் இருந்த ஒவ்வொரு
நிமிடங்களில் என்பார்வை-அவள் முகத்தை
சுட்டுக் கொண்டேயிருந்தது
ஏதோ இறைவன் செய்த
தவமென்று-தொரியவில்லை
அவள் கைக்குட்டை தவறுதலாக
பேருந்தில் விழுந்து விட்டது
அவள் ஜன்னல் ஓரத்தில்-இருக்கையில்
அவள் முடிகளை காற்று
திருடிக் கொண்டே இருந்தது
ஏதோ தன்னை மறந்து-கற்பணை
கடலில் மிதந்து கொண்டு -இருந்தாள்
அவள் கைக்குட்டையை-எடுத்து
என் கையாள் பொத்திய-படி
இந்தாங்கள் என்று-நீட்டினேன்
ஏதோ மெளனம் கலந்த
புன்னகை அவள் முகத்தில் -மலர்ந்தது,
அவள் சிரிப்பில் கட்டுண்டு
அவள் சிரிப்பு என் -கழுத்தில்
மாலையாக ஏறியது போல்-ஒரு
ஒரு புன்னகைப் புயல்-என்னுள் வீசியது
என் வீட்டில் இருந்து
உன் வீடு மூன்றாவது- வீதியென்று
நீ சொன்னபோதுதான் நான்-அறிந்தேன்
நீ சிறகுடைந்த பறவை-போல்
நீ வீட்டுக்குள் கட்டுண்டு கிடந்தாய்
என்பதை நீ சொன்னபோதுதான்-நான் அறிந்தேன்
நீ ஒரு சிறைக்கூட்டுக் -குயிலென்று
காதல் என்னும் சிறகை வளர்த்து
கூட்டை ஒடைத்து வெளியே வருவாயா
உன் விலாசம் அறிந்த-நான்
உன் வருகைக்காக-வீதியோரத்தில்
பயணிகள் நிழல் குடையின் கீழ்
பேருந்து பயணிகளில் ஒருவனாய்
உன் வருகைக்காக-நான்
காத்திருப்பேன் என் சிறைக் கூட்டுக் -குயிலே
நீ வெளியே வா…..வா…….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆகா ஓரு சிறுகதை போல உள்ளதே!
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
unkalin padaipukal sirappaka irukinrathu valthukal melum valaraddum mahsy
வணக்கம்
கிரபாகரன்
உங்கள் வாழ்த்தும் ஆசீயும் எப்போதும் இருக்கட்டும் வருகைக்கும் கருத்துமடலுக்கும் எனது நன்றி கிருபாகரன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
unkal padipukal siranthathaka irukinrathu melum unkalin padipukal thodara valthukal mahsy
வணக்கம்
E.கிரபாகரன்
உங்கள் வாழ்த்தும் ஆசீயும் எப்போதும் இருக்கட்டும் உங்களைப் போன்ற வாசக உள்ளங்களை சென்றடைய வேண்டும் என்ற சிந்தனை நோக்குடன் 250க்குமேற்பட்ட பதிவுகள் கவிதையாகவும் சிறுகைதயாகவும் கணணி சம்மந்தமான விடயங்களும் உள்ளடங்க என் வலைப்பூவில் எழுதியிருக்கேன் படியுங்கள் வருகைக்கும் கருத்துமடலுக்கும் எனது நன்றி கிருபாகரன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உண்மை நிகழ்வா? கற்பனை போல் தோன்றவில்லை வாழ்த்துக்கள்
வணக்கம்
முரளி(அண்ணா)
இப்படியும் பல இளைஞ்ஞர்களி வாழ்கையில் நடக்கிற சம்பவங்கள் பற்றி ஒரு கற்பனைதான் அண்ணா, கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நேரில் அழைப்பு விட்டால் நன்றாக இருக்குமே. கவிதை ரஸிக்கும் படி அழகாக இருக்கிறது. அன்புடன்
வணக்கம்
அம்மா
கருத்துக்கு மிக்க நன்றியம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விரைவில் நல்லது நடக்கட்டும்… வாழ்த்துக்கள்…
அருமை வரிகள்… பாராட்டுக்கள்…
வணக்கம்
தனபால்(அண்ணா)
உங்களின் கருத்துமடல் எப்போதும் வாழ்த்துமடலாக மலரட்டும் நன்றிஅண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறைக்கூட்டுக் குயில் வெகு விரைவில் உங்கள் கவிதை கேட்டு வெளியே வரட்டும், ரூபன்!
உணர்ச்சிமயமான கவிதை!
பாராட்டுக்கள்!
வணக்கம்
அம்மா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது உங்கள் வாழ்த்துமடல் எப்போதும் ஒளிரட்டும் வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(சிறைக்கூட்டுக் குயிலே வெளியே வா….வா)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-