பள்ளிக் காலங்களில்
பரீட்சைகள் முடிந்தது
சொந்தங்களைப் பார்க்க
வலிகள் தாங்கிய-இதயத்தை
மெதுவாக-தாங்கிய படி
புயல்காற்று மனதுக்குள்-வீசியதுபோல
வீதியை நோக்கி வருகிறேன்
பேருந்தில் ஏறுவதற்கு-வந்தது பேருந்து
இருக்கை இல்லாமல் கால்கள் வலிக்க வலிக்க
நின்ற நிலையில் பயணிந்த போது
ஓர் இருக்கையில் அழகிய இளம்பெண்-அமர்ந்திருந்தாள்
அந்த இருக்கையின் அருகே
நானும் அமர்ந்தேன் ஒன்றாக பயணித்தேன்
சில நிமிடங்கள் சில மணித்தியாலயங்கள்
அவள் பேசாமல் இருந்த ஒவ்வொரு
நிமிடங்களில் என்பார்வை-அவள் முகத்தை
சுட்டுக் கொண்டேயிருந்தது
ஏதோ இறைவன் செய்த
தவமென்று-தொரியவில்லை
அவள் கைக்குட்டை தவறுதலாக
பேருந்தில் விழுந்து விட்டது
அவள் ஜன்னல் ஓரத்தில்-இருக்கையில்
அவள் முடிகளை காற்று
திருடிக் கொண்டே இருந்தது
ஏதோ தன்னை மறந்து-கற்பணை
கடலில் மிதந்து கொண்டு -இருந்தாள்
அவள் கைக்குட்டையை-எடுத்து
என் கையாள் பொத்திய-படி
இந்தாங்கள் என்று-நீட்டினேன்
ஏதோ மெளனம் கலந்த
புன்னகை அவள் முகத்தில் -மலர்ந்தது,
அவள் சிரிப்பில் கட்டுண்டு
அவள் சிரிப்பு என் -கழுத்தில்
மாலையாக ஏறியது போல்-ஒரு
ஒரு புன்னகைப் புயல்-என்னுள் வீசியது
என் வீட்டில் இருந்து
உன் வீடு மூன்றாவது- வீதியென்று
நீ சொன்னபோதுதான் நான்-அறிந்தேன்
நீ சிறகுடைந்த பறவை-போல்
நீ வீட்டுக்குள் கட்டுண்டு கிடந்தாய்
என்பதை நீ சொன்னபோதுதான்-நான் அறிந்தேன்
நீ ஒரு சிறைக்கூட்டுக் -குயிலென்று
காதல் என்னும் சிறகை வளர்த்து
கூட்டை ஒடைத்து வெளியே வருவாயா
உன் விலாசம் அறிந்த-நான்
உன் வருகைக்காக-வீதியோரத்தில்
பயணிகள் நிழல் குடையின் கீழ்
பேருந்து பயணிகளில் ஒருவனாய்
உன் வருகைக்காக-நான்
காத்திருப்பேன் என் சிறைக் கூட்டுக் -குயிலே
நீ வெளியே வா…..வா…….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-