தந்தையும் தாயும்-இருந்தார்கள்
எங்களை தாவித் தாவி -அனைத்தார்கள்
மெல்லிய மேனியில்-அள்ளிய கரத்தாள்
கிள்ளிய பசிக்கு சோறு-ஊட்டியவர்கள்
உச்சி முகந்தவர்கள்-எங்கே???
அன்று விழுந்தது-செல்லு
அள்ளி எடுத்தது -மண்னு
துள்ளி சிதறிஓடியது-அன்று,
சப்தங்கள் ஓய்ந்தது
உறவுகளும் வந்தது
அள்ளி எடுத்தது -உடலை
கதறி அழுதோம் -அன்று
என்னைப் பெற்ற தெய்வங்களை-இழந்தேன்
சிறு வயதில் என் அவயங்களையும்-இழந்தேன்
ஊன்று கோல் ஒன்றின்-உதவியுடன்
ஊர் முழுக்க ஓலமிட்டு
ஒருசான் வயிற்றுப் பசிக்காக
ஒருநாள் பொழுதை கழிக்கிறேன்
தொட்டிலில் ஆடிய குழந்தையின்
தொட்டில் கயிறு அறுந்து விழுந்ததும் -அன்று
பனை மரங்களும் தென்னை -மரங்களும்
வாடி கருகிப் போனது -அன்று
மெல்லிய காற்றுவீசும் -போது
கெந்தக துகள்களின் -வாசணை
ஈழமண்ணில் மெல்ல மெல்ல
ஊயிரை மாய்க்குதே,
பாசம் காட்டி என்னைப் பெற்ற-தெய்வங்கள்
பாதி வழியினில் -போனார்கள்
பாவம் அறியாத -நான்
பாசம் காட்ட யாரும் இல்லாமல்
பரதேசியாக அலைகிறேன்-இன்று,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சோகத்தை வெளிப்படுத்தும் கவிதை. படிக்கவே கஷ்டம். பாதித்தவர்கள் மன நிலை எப்படி இருக்கும். வேதனை. அன்புடன்
வணக்கம்
அம்மா
என்னதான் செய்வது இதில் பக்குவப்பட்ட இளைஞ்ஞனின் மன நிலை குறை குடம் போல் தளம்பிக் கொண்டுதான் இருக்கும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நெஞ்சை நெகிழ வைக்கும் கவிதை. பிரிவின் ஏக்கர்ததை உணர்த்தும் வரிகள் நன்றி
வணக்கம்
ஐயா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது மிக நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதை நெகிழ வைக்கும் கவிதை.
வணக்கம்
ஐயா
கருத்துக்கு மிக நன்றிஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வேதனை நிலை தான் ஆண்டவன் கண்திறக்கட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி சகோதரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாசம் காட்டி என்னைப் பெற்ற-தெய்வங்கள்
பாதி வழியினில் -போனார்கள்
பாவம் ….
வணக்கம்
அம்மா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்கசந்தோசமாக உள்ளது நன்றியம்மா
பிள்ளைகளுக்கு பாசம் காட்டி நிலாச்சோறு ஊட்டி தன் குழந்தைகளுக்கு தலாட்டுப்படிய பெற்ற தெய்வங்கள் எத்தனைபேர் கருகி மாண்டார்கள் அதுமட்டுமா வாழவேண்டிய சின்னஞ்சிறு சிறுவர்கள் அவயங்களையும் இழந்தவர்கள் எத்தனைபேர் பசிக்கு அழுத குழந்தை தன் தாய் உயிருடன் இருக்கிறா என்று இறந்த தாய்யின் முலையில் பால் குடித்த சரித்திரமும் ஈழத்தில் தான்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதை நெகிழ வைக்கிறது நண்பரே…
வேறு ஏதும் சொல்ல வார்த்தைகள் இல்லை…
வணக்கம்
தனபால்(அண்ணா)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்கசந்தோசமாக உள்ளது நன்றியண்ணா
பிள்ளைகளுக்கு பாசம் காட்டி நிலாச்சோறு ஊட்டி தன் குழந்தைகளுக்கு தலாட்டுப்படிய பெற்ற தெய்வங்கள் எத்தனைபேர் கருகி மாண்டார்கள் அதுமட்டுமா வாழவேண்டிய சின்னஞ்சிறு சிறுவர்கள் அவயங்களையும் இழந்தவர்கள் எத்தனைபேர்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒவ்வொரு வார்த்த்தையும் கண்ணீர் வரவழைக்கிறது
வேதனை வெளிப்படு ம் கவிதை
வணக்கம்
முரளி(அண்ணா)
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தேசமாக உள்ளது ஈழத்தில் அனுபவித்த துன்பங்கள் எத்தனை இளம் பிஞ்சுகள் தன் அவயங்களையும் பெற்ற தெய்வங்களையும் ,அவர்கள் வணங்கும் இறைவனையும் அவர்கள் வாழ்ந்த மண்ணையும் இழந்து ஆறாத சோகத்தில் மூழ்கியுள்ளார்கள் அவைமட்டுமா??வாழ்கை ஒருதொடர் கதையாகத்தான் உள்ளது,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(பரதேசியாய் அலைகிறேன்)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-