தந்தையும் தாயும்-இருந்தார்கள்
எங்களை தாவித் தாவி -அனைத்தார்கள்
மெல்லிய மேனியில்-அள்ளிய கரத்தாள்
கிள்ளிய பசிக்கு சோறு-ஊட்டியவர்கள்
உச்சி முகந்தவர்கள்-எங்கே???
அன்று விழுந்தது-செல்லு
அள்ளி எடுத்தது -மண்னு
துள்ளி சிதறிஓடியது-அன்று,
சப்தங்கள் ஓய்ந்தது
உறவுகளும் வந்தது
அள்ளி எடுத்தது -உடலை
கதறி அழுதோம் -அன்று
என்னைப் பெற்ற தெய்வங்களை-இழந்தேன்
சிறு வயதில் என் அவயங்களையும்-இழந்தேன்
ஊன்று கோல் ஒன்றின்-உதவியுடன்
ஊர் முழுக்க ஓலமிட்டு
ஒருசான் வயிற்றுப் பசிக்காக
ஒருநாள் பொழுதை கழிக்கிறேன்
தொட்டிலில் ஆடிய குழந்தையின்
தொட்டில் கயிறு அறுந்து விழுந்ததும் -அன்று
பனை மரங்களும் தென்னை -மரங்களும்
வாடி கருகிப் போனது -அன்று
மெல்லிய காற்றுவீசும் -போது
கெந்தக துகள்களின் -வாசணை
ஈழமண்ணில் மெல்ல மெல்ல
ஊயிரை மாய்க்குதே,
பாசம் காட்டி என்னைப் பெற்ற-தெய்வங்கள்
பாதி வழியினில் -போனார்கள்
பாவம் அறியாத -நான்
பாசம் காட்ட யாரும் இல்லாமல்
பரதேசியாக அலைகிறேன்-இன்று,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-