பேனாவின் துணையுடன்
வெள்ளை காகிதத்தில்
உனக்காக வரைந்தேன்
என் காதல் பயணத்தை
மாசற்ற விசும்பின்-வதனம்போல்
உன் வதனமடி
நிதமான தென்றல்-வீசும்போது
காற்றுக்கு நெருடும்
உன் கூந்தலின் -அழகு
என்னை நெருடவைத்ததடி
அன்னத்தின் நடையழகே
என்னாசை அருமை -நாயகியே
உன் உதடு-சிவந்த
கொவ்வைப் பழம் போன்றது
என் கன்னத்தில் -நீ பதித்த
முத்தத்தின் அடையாளச் -சின்னமாய்
உன் சிகப்பு உதடு -பதிந்ததடி
உருவத்தை காட்டும்
கண்ணாடி கையில்எடுத்த -வண்ணம்
நீ பதித்த மலர்ந்த பூ போன்ற
அழியாத அடையாள -சின்னத்தை
பகலவன் திருட முன்
ஈரம் வற்றமுன்
வெள்ளைக் காகிதத்தில் -ஒற்றி எடுத்தேனடி
ஒற்றி எடுத்த வெள்ளைக்-காகிதம்
மொனனலிஸா ஓவியம் -போல்
மங்காமல் இருக்குதடி
உலகத்தின் (ஏழு)அதிசயங்கள்-வரிசையில்
நீ என் கன்னத்தில் பதித்த
அடையாளச் சின்னம்-முத்தமடி
எட்டாவது(08) அதிசயமாய்
என் நெஞ்சுக்குள் – சுற்றுதடி
உன் அடையாளச்சின்னம்
எனக்கு நிழல்குடை பிடிக்குதடி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-