அரும்பு மீசை துளிர் விடும்-காலம்
உன்னை உயிருக்கு உயிராய்-காதலிச்சேன்
நீ இல்லாமல் நான்- இல்லை
நான் இல்லாமல் -நீ இல்லை
என்ற ஈறெடுக்கு தொடர்களுக்குள்
சிட்டுக்குருவி போல் -பறந்து
காதல் வானில் சிறகு -விரித்தோம்
பெண்ணே தாண்டாதே தாண்டாதே
வாசற் படியைத்தான் -தாண்டாதே
பிரியாதே பிரியாதே
காதலனை விட்டுப் பிரியாதே
உன் அப்பன் உன் ஆத்தாள்
என்னப்பன் என்னாஆத்தாள்
இரண்டுபேரும் சங்க கூட்டம்- போட்டு
ஊர்முழுக்க விலாசமாய்
திருமண வாழ்த்து மடல்-கொடுத்து
அக்கினி சாட்சியாய்
அருந்ததி-பார்த்து
அம்மி மிதித்து-நடக்க இருக்குது
இருவரி மணக்கோலம்
அதை மறந்து போகப்போகிறாயா?-பெண்ணே
தாண்டாதே தாண்டாதே
வாசற் படியைத்தான் -தாண்டாதே
பிரியாதே பிரியாதே
காதலனை விட்டுப் பிரியாதே
காதலன் காதலியிடையே
வாய்ப் பேச்சால் வீன் பழிவருவது-வழக்கம்
அந்த வீன் பேச்சை நிறுத்தி விடும்-பெண்ணே
போர்கோலம் கொள்ளாமல்
பொறுமை காத்திடும் பெண்ணே,
நம் இருவரின் பாச உறவை
தூக்கி எறிந்து விடாதே -பெண்ணே
தாண்டாதே தாண்டாதே
வாசற் படியைத்தான் -தாண்டாதே
பிரியாதே பிரியாதே
காதலனை விட்டுப் பிரியாதே
காதல் வானில் சிறகை விரிக்கும்-காலத்தில்
நாம் இருவர் நமக்கிருவர்
என்று அடிக்கடி சொல்வாயே-பெண்ணே
அந்த வார்தைக்கு கை விலங்கு
பூட்டுப் போட்டுவிட்டாய் -பெண்ணே
அந்த கை விலங்குப் பூட்டை
உடைத்தெறிய -வந்திடும் பெண்ணே
வந்திடும் பெண்ணே
தாண்டாதே தாண்டாதே
வாசற் படியைத்தான் -தாண்டாதே
பிரியாதே பிரியாதே
காதலனை விட்டுப் பிரியாதே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் ரூபன்! இறைவன் உங்களுக்கு மேலும் மேலும் அருளாசி வழங்கட்டும்!
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியம்மா உங்கள் ஆசீ எப்போதும் இருக்கட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
http://blogintamil.blogspot.in/2013/02/puthiyavarkal.html
தம்பி இன்று உன்னை அறிமுகம் செய்துள்ளேன்:
http://blogintamil.blogspot.in/2013/02/puthiyavarkal.html
வணக்கம்
விஜயன்(அண்ணா)
வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றியண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
விஜயன்(அண்ணா)
மிக்க நன்றியண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
சகோதரா
ஆத்தாள் என்று வரவேண்டும். (ல்) தவறு.
இந்தக் காலத்தில் படி தாண்டாதே என்பது ஏற்க முடியாது.
வேறு மாதிரிக் கூறலாம்.
நிறைய கவிதைகள் வாசியுங்கள் .
உதவியாக இருக்கும். .
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
வேதா,இலங்காதிலகம்
உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது நீங்கள் சொன்னமாதிரி திருத்தம் செய்யப்பட்டுள்ளது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்!
இக்கவிதை உங்கள் வாழ்வின் நிகழ்வாக இருப்பின்
துணிந்து போராடுங்கள்
காதல் வெல்லும்!
முன்பு சில முறை உங்கள் வலைக்கு வந்திருக்கிறேன்
இனித் தொடா்ந்து வருவேன்!
கவிதைக் கலையில் நீங்கள் அடுத்த படிம வளா்ச்சியைக்
காண வேண்டும்!
என் வலையில் மரபுக் கவிதை இலக்கணத்தை எழுத வுள்ளேன்
தொடா்ந்து படித்து பயன் பெறுங்கள்
உங்கள் மின் அஞ்சலைத் தெரிவிக்கவும்
தாண்டாதே! தாண்டாதே! வாசற் தன்னை!
தகிதகித்துத் தந்துள்ள கவிதை கண்டேன்!
வேண்டாதே என்றிருக்கும் என்றன் உள்ளம்
வேலவனைத் தாழ்பணிந்து வேண்டி நிற்கும்!
துாண்டாதே கோபத்தை! துணிவை ஊட்டு!
துாயமனக் காதலரை ஒன்றாய் ஆக்கு!
ஆண்டவனே! அல்லாவே! அம்மை அப்பா!
அனைவரையும் தொழுகின்றேன்! ரூபன் வெல்க!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
03.02.2013
வணக்கம்
கவிஞர் பாரதிதாசன்(ஐயா)
உங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என் வாழ்க்கையில் நடைபெறவில்லை எமது சமூகத்தில் காதலன் காதலி இடையே பிரிவுகள் என்று ஒன்று வந்தால் எப்படி இருக்கும் என்ற கருத்தை மையாமாக வைத்து எழுதியுள்ளேன் ஐயா உங்கள் கருத்தக்கு மிக்க நன்றி
உங்களின் வாழ்த்தும் ஆசீயும் எப்போதும் இருக்கட்டும் வாழ்க வளமுடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எளிமையாவும் இயல்பாகவும் காதலனின் எண்ணத்தை சொல்லி இருக்க ரூபன். சின்ன சின்ன பிழைகளை சரி செய்து விடு ரூபன்.சில நேரங்களில் எனக்கும் ஏற்படுவதுண்டு.
வாழ்த்துக்கள். தொடர்க
வணக்கம்
முரளிதரன்(அண்ணா)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியண்ணா சின்ன சின்ன தவறுகள் திருத்தப்பட்டுள்ளது என்னால் அறியாமல் இருந்த வறுகளை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றியண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தாண்டாதே என்று சொல்லி விட்டுக் காதலனைப் பிரியாதே என்றும் சொன்னால் எப்படி?
வணக்கம்
kuttan(sir)
தாண்டாதே தாண்டாதே வாசற் படியைத்தான் தாண்டாதே
பிரியாதே பிரியாதே காதலனை விட்டுப் பிரியாதே, அதாவது ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையில் நடைபெறும் பினக்கு அதாவது காதலன் சொல்லச்சொல்ல வீட்டு வாசற் படியை
தாண்டி போனால் அவள் காதலனை பிரிந்த மாதிரித்தான் (சார்) அதத்தான் சொன்னேன்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(தாண்டாதே தாண்டாதே வாசற் படியைத்தான் தாண்டாதே)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-