தாய் போற்ற தான்-உயர
தரணியெங்கும் புகழ்-பரவ
கல்வியே தாரகமந்திரம்மென்று
கல்லூரி வாசலில்-நூழைந்தேன்
கல்வியில் மாகோலம் கொள்ள
தன்நிகர் இல்லாப்-புகழுக்கு
பள்ளிக்குப் போனோம்
துப்பாக்கி சப்தம் -கேட்டதடா
செல்வந்து விழுந்ததடா
பாதி வழியினிலே
குத்துயிராய்-குலயுயிராய்
அங்க அவயங்கள்-சிதற
வெள்ளை நிற சிறகினிலே
இரத்தக் கறை-படிந்ததடா,
மின்சாரம் இல்லையடா
மீண்டும் எழுந்து படிப்பதற்கு
மெழுகு வத்திதான்-எங்கள்
வாழ்க்கையின் உற்ற-தோழனடா
மெழுகுவத்தி கண்ணீரை-விட்டு
ஒளிக்கீற்றை பிரகாசிக்கும்
உருகும் கண்ணீர் துளிகளை
உன்றாக சேர்த்து-மீண்டும்
ஒரு மெழுகுவத்தி,செய்திடுவோம்
பள்ளிக்கு வருவது-என்றால்
நான்கு(04)மயில் தூரம்
குறு மணல் வீதியில்
கால் பாதங்கள் வலிக்க
உப்பள வியர்வை சிந்த
உள்ளம் கால்களை குறுமணல்-பதம்பார்க்க
கல்லூரி சேர்ந்தவுடன்-சற்று
ஒரு தடவை உள்ளம் காலைப் -பார்த்தாள்
இரத்தம் சொட்டு சொட்டாக-கசிந்துவரும்
இத்தனை தடைகளையும்
கடக்க முடியாமல்
மடிந்த உறவுகள் -எத்தனை
இத்தனை தடைகளையும்-தாண்டி
கல்வியைப்பயின்ற-மாணவன்
வரிசையில் நானும்
ஒருதானாய் இருக்கிறேன்
கல்லூரி வாழ்க்கையில்-அப்போதும்
அவலங்களை நாம்-சுமந்தோம்
இப்போ எம் பிஞ்சு உள்ளங்கள்
சுமக்குது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-