ஊர் கூடி தேர் இழுத்தால் ஊருக்கு கொண்டாட்டம் வானம் கறுத்தது கார்மேகம் வானத்தில் குடி கொண்டது ஊர்தாழ மழை பெய்ந்தால் விவசாயிக்கு திண்டாட்டம் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் உலகத்துக்கு செல்வத்தை வாரி கொடுக்குது எங்கள் வயல் நிலங்கள்
சனத்தொகைப் பெருக்கம் இறப்புக்களின் பெருக்கம் நவநாகரீக வளர்ச்சி கைத்தொழில்ச் சாலைகளின்-உருவாக்கம் எங்கள் வயல் நிலங்கள் அழிந்தது இந்த சுகபோக வாழ்வுக்கு
மாரி மழை பொழிந்தது எங்கள் வயல் நிலம் அழிந்தது தவளை இனம் வாழுது ஆங்காங்கே சங்கீதம்-இசை பாடுது கடன் வேண்டி வயல் உழுத விவசாயி கடன் தொல்லை-தாங்க முடியாமல் மூன்றடிக் கயிறுக்கு மூன்று நிமிடத்தில் -உயிர்விட் விவசாயி எத்தனைபேர் கண்ணீர் வடிந்த முகத்துடன் பைத்தியமாய் அலையும் உறவுகள் எத்தனைபேர்
தமிழக விவசாயிக்கு காவேரி தண்ணீர் இல்லையென்றால் அங்கு வயல் நிலங்கள் எல்லாம் வரண்டு போகுது, ஈழத்து விவசாயிக்கு குண்டு மழை பொழிந்தால் நிலம் உழுவதற்கு,திண்டாட்டம் அப்படி உழுது செய்தாலும் கந்தக துகல்களால்,வரண்டு போகுது வயல் நிலங்கள் விவசாயி தன் தொழிலை செய்யமுடியாமல்-இன்று மரணத்தின் விழிம்பில் சிக்கித் தவிக்கிறான்-இந்த துயரங்கள் தொடர்ந்தால் என்னவாகும் எம் நிலமை