சிந்திய கண்ணீர்த்துளிகள்
சிதறிய நேரங்களில்-தெரிகிறது
சிதறிய இரத்தம்
சிறிது நேரங்களில்-தெரிகிறது
வித்துடல் தாங்கிய
கல்லறையில்,நீ
கண்மூடி தூங்குகிறாய்
என் மகனே-நீ
உன் உறவுகளின் அவயக்குரல்
கேட்க வில்லையா -மகனே
நீ கல்லறை திறந்து
எழும்பி வா-என்மகனே,
கல்லறை மேனி -தழுவிய உன்னை,
எங்கள் கண்ணீர்த் துளிகள்
தினம் தினம் வாழ்த்துமடல்
சொல்லுதடா-மகனே,
உன் உறவுகள்,உன்
நினைவை தினம் தினம்-சுமந்து
தினம் தினம் வேதனை
சிலுவை சுமக்கிறார்கள்
அந்த துன்பத்தின் விளைவை,
அறிய நீ இல்லையடா -மகனே,
கல்லறை மேனி தழுவிய உன்னை
எங்கள் கண்ணீர் துளிகள்
தினம் தினம்வாழ்த்துமடல்
சொல்லுதடா-மகனே,
நாங்கள் விடும் கண்ணீர்த்
துளிகளின் வாழ்த்துக்களை-விட
உன் கல்லறைக்கு அருகில்-இருக்கும்
றோஜா செடியின் -பூக்கள்
கல்லறை மேனி தழுவிய உன்னை
முகந்து முகந்து தினம்தினம்
வாழ்த்துமடல் சொல்லுதடா-மகனே,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
வணக்கம்
மணிராஜ்
முகம் அறியாத உறவுக்கு நீங்கள் வாழ்த்திய பொங்கல் வாழ்த்து மடல் என்னை பரவசப்படுத்தி விட்டது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரூபன்!
வணக்கம்
அம்மா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியம்மா நம்மட உறவுகள் எத்தனை பிள்ளைகளை இழந்து அழுத சம்பவங்கள் நிறைய அந்த வலிகளின் நினைவுக் கீறல்தான் இந்தகவிதை
உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உருக்கமான கவிதை
வணக்கம்
முரளி(அண்ணா)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியண்ணா நம்மட உறவுகள் எத்தனை பிள்ளைகளை இழந்து அழுத சம்பவங்கள் நிறைய அந்த வலிகளின் நினைவுக் கீறல்தான் இது
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், முரளியண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(மகனே நான்உனக்காக சிந்திய கண்ணீர்த்துளிகள்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-