ஜீவன் அழகான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் அவனுக்கு அம்மா அப்பா என்ற இருசொந்தங்கள்தான் உள்ளது ஜீவனைப் பெற்றெடுப்பதற்க்காக தாயனவள் வணங்காத தெய்வங்களும் இல்லை அவள் போகாத கோயிலும் இல்லை திருமணம் செய்து 5 வருடங்கள் கழிந்த பின்பு தான் அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள் அவன்தான் ஜீவன்,
தாய்மடியில் பிறந்து மண்மடியில் வளர்ந்து பலகனாய் வளர்ந்து இன்று இளைஞ்ஞனாய் நிக்கின்றான் ஜீவன், ஜீவன் குடும்பத்தில் ஒரே வாரிசு என்ற காரணத்தாள் அவன் கேட்டதை எல்லாம் வேண்டிக் கொடுப்பார்கள் அது மட்டுமா? இன்று போட்ட உடைகளை நாளை போடமாட்டான்,உடை கொஞ்சம் கசங்கினால் போதும் அதையும் மாற்றிவிட்டு புதிய உடையை அணிந்திடுவான், ஜீவனுடைய அப்பா ஒரு தொழில் அதிபர் அப்படி இருக்கும் போது ஜீவனிடத்தில் பணத்துக்கு குறைவே இல்லை,
ஜீவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான் அவன் படிக்கும் பள்ளிக்கூடம் ஒரு கலவன் பள்ளிக்கூடம் அங்கு ஆண்களும் பெண்களும் கல்வி கற்க்கும் பள்ளிக்கூடம் ஜீவன் 10ம் வகுப்பு படிக்கும் போது மிகவும் அழகானவன் நல்ல மா நிறம் கொண்டவன் அவனுடைய பேச்சும் நடையும் பெண்களை மெதுவாக கவரும் அப்படி அழகு படைத்தவன் ஜீவன்,
அவனுடன் 10ம் வகுப்பு படிக்கும் ஒரே வகுப்பறையில் உள்ள அமுதவிழி என்ற மாணவியுடன் காதல் மலர்ந்தது ஜீவன் மட்டுந்தான்அழகு அல்ல அமுதவிழியும் நல்ல அழகான பெண் அவளை பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் தேவை, அப்படிப்பட்ட அழகு தேவதைதான் அமுதவிழி,
அமுதவிழியின் குடும்பம் ஒரு கஸ்டப்பட் குடும்ப பின்னனியைச் சார்ந்தவர்கள் அவர்கள் ஒரு (குயவர்கள்)அதாவது சட்டி பானை செய்பவர்கள் அப்படிப்பட்ட குடும்பத்தில் அப்படிப்பட்ட அழகான பெண் பிறந்தாள் அவள்தான் அமுதவிழி அவளுடைய தாயும் தந்தையும் மண்னுலகை விட்டு ஆழிப்பேரலையின் தாக்கத்தாள் சிவபதம் அடைந்தார்கள் அமுதவிழி தனியாக தனித்துவிட்டாள் படைத்த இறைவன் சும்மா இருப்பானா,அமுதவிழியை அவளுடைய சித்தி வளர்த்தாள் அவளுடைய நல்லது கெட்டது எல்லாம் அவளுடைய சித்திதான் இப்படியாக அமுதவிழியின் வாழ்க்கை தொடர்ந்தது,
ஜீவனுக்கும் அமுதவிழிக்கும் இடையில் காதல் நட்பு மலர்ந்து 2வருடங்கள் ஆகிவிட்டது,ஜீவன் காதல் என்னும் புனித யாத்திரையை ஆரம்பித்த நாளில்லிருந்து சரியான நேரத்துக்கு வீட்டுக்கு போவதில்லை இதைப்பார்த்த ஜீவனின் தாயனவள்கேட்க்கின்றாள் என்னமகனே எல்லாநாளும் நேரத்துக்கு வீட்டக்கு வாரனி உன்னை சில நாட்களாக கவனித்து வருகிறேன் மிகவும் காலம்தாழ்த்தி வருகிறாய் என்று தாய் கேட்டாள் அதற்கு ஜீவன் சொல்லுகிறான் ஒன்றும் இல்ல அம்மா இன்று பள்ளியில் விவசாயப்பாடத்தில் செய்முறை பயிற்சியாக நாற்று மேடை தயாரித்தல் வேலை செய்ததாள் வீட்டுக்கு காலம் தாழ்த்திவரவேண்டியாச்சு என்று பதில் சொன்னான்
எப்படிஎன்றாலும் நாம எந்த எந்த டைப்பில் கண்ணை சிமிட்டுவோம் என்று பெற்றவள் கண்டுபிடித்திடுவாள்,ஏமாத்த முடியாது,அப்படிப்பட்டது தாயின் சக்தி
ஆனால் ஜீவன் அமுதவிழியை காதலிப்பது அவனுடைய குடும்பத்துக்கு தெரியாது அதைப்போன்று அமுதவிழியின் வீட்டுக்கும் தெரியாது ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு ஜீவனும் அமுதவிழியும் பள்ளிக்குபக்கத்தில் உள்ள பூங்கா வனத்தில் ஊஞ்சலில் உக்காந்து இருந்த படி பேசிக்கொன்டு இருந்தாள்கள் அப்போது ஜீவனுடைய அப்பாவும் அம்மாவும் எதேச்சியாக அந்த வழியாக வந்தார்கள் அவர்கள் இருவரும்பேசிக் கொண்டு இருப்பதை கண்டார்கள் ஒன்றும் பேசாமல் வீட்டுக்கு வந்தார்கள் ஆனால் அவன் அப்பா பார்த்ததை ஜீவன் காணவில்லை.
ஜீவன் வீட்டக்கு வந்தான்அப்போது அவனுடைய தாயும் தந்தையும் மெளனமாக நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள் ஜீவன் அவனுடைய உடைகளை மாற்றிவிட்டு சரத்தை கட்டியபடி தொலைக்காட்சிக்கு பக்கத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான்,
அப்போது தந்தை கேட்கிறார் (இன்று எங்கே போனாய்)அவன் சொல்லுகிறான் நான்பள்ளிக்கூடம் போனேன்(நீ வேறு இடத்துக்கு போக வில்லையா? என்று பலவாறு கேள்விக்கனைகளை தொடுத்தார் அப்போது ஜீவன் சொல்லுகிறான் நான் ஒரு இடமும் போகவில்லை பள்ளிக்கூடம் மட்டுந்தான் போனேன் என்று பொய்யான பதிலை கூறினான் ஜீவனின் அப்பா ஆத்திரமடைந்தார்,
அப்பா சொல்லுகிறார் 10 மணிக்கு நீயும் சாதி தரம்குறைந்த அந்த அமுதவிழியும் பூங்காவனதில் பேசிக்கொண்டு இருந்தனி நானும் உன் அம்மாவும் பார்தோம் என்று கூற ஜீவன் ஆமாம் என்று சுய நிலை மாறியவாறு பதில் கூறினான்
அந்தவேலையில் ஜீவனின் தகப்பன் சொல்லுகிறார் நீ அவளை காதலிச்சாள் உன் அப்பாவையும் அம்மாவையும் நீ மரணத்தில்தான் சந்திப்பாய் என்று அகோர வார்த்தையாள் சொன்னார் அதைக்கேட்ட ஜீவன் மெளனமாகினான்,
சில நாட்கள் கடந்த நிலையில் அமுதவிழியின் முகத்தை கூட திரும்பிப்பார்பதில்லை,இருவருக்கும் இடையில் உள்ள அன்னியஒன்னியத் தொடர்பு மின்சாரம் துண்டிப்பது போல துண்டிக்கப்பட்டது,
ஜீவனைப்பார்த்து அமுதவிழி கேட்கின்றாள் என்னுடன் பேசமல் இருக்கின்றாய் என்ன காரணம் என்று கேட்டாள் இப்படித்தான் சில ஆண்கள் தங்கட காரியம் முடிந்தாள் மற்றவங்களை ஒதுக்கிவைத்து விட்டுவிடுவாங்கள் என்று பதில் கூறினால்,அந்தவேலையில் ஜீவன் சொல்லுகிறான் அந்தமாதிரி ஆள் இல்லை நான் ,பெரிய பிரச்சினை என்ன என்று அமுதவிழி கேட்டாள் ஜீவனும் சொல்லுகிறான்
அவனுடைய அப்பா சொன்ன அகோர வர்த்தைகளை சொன்னான் அந்த வேளையில் அமுதவிழி சொல்லுகிறாள் நான் ஆரம்பத்திலே சொன்னேன் நான் ஒரு அனாதை சாதிகுறைவான குடும்பத்தில் பிறந்து என்னுடைய சின்னத்தாயுடன் வாழ்ந்த நான் என்று என்னுடைய வரலாற்றை சொன்னேன் நீ அதையும் பொருட்ப்படுத்தாமல் ஒற்றைக்காலில் நின்றாய் அப்போ, இப்ப என்ன சொல்லுகிறாய் உன்அம்மா அப்பா பேச்சை கேட்டுத்தான் இப்படி நடக்கிறாய் என்று வரம்பு மிறிய வார்தைகளால் கேட்டாள்,
இருவரும் பரிவு என்ற நேர்கோட்டை அண்மிக்கின்றார்கள் ஜீவன் சொல்லுகிறான் அமுதவிழி இன்றுடன் உனக்கும் எனக்கும் இடையில் உள்ள தொடர்பு ஒன்றை ஒன்று சந்திக்காத நேர்கோட்டைப் போன்றது இனி நீ வேறு,நான் வேறு என்று பதில் கூறினான்,
அமுதவிழியின் கண் விழிகளில் இருந்து கண்ணீர் பெருகியது,அந்த வார்த்தையை கேட்டவுடன் அவளுடைய மனம் அலைமோதியது,
இன்று சாதி என்ற வார்த்தையாள் எத்தனை காதலர்கள் எத்தனை குடும்பங்கள் பரிவு என்ற துயர சிலுவையை சுமந்து கொன்டு வாழ்கிறார்கள் காதலுக்கு சாதி ,மொழி என்ற த்ததவக் கோள்ப்பாடுகள் இல்லை ஆணும் பெண்னும் மனம் ஒத்து வாழ்ந்தாள் போதும் அதுதான் வாழ்க்கை
சாதி குறைவானவனின் உடம்பில் ஓடும் -குருதியன் நிறம் சிவப்புத்தான், சாதித்தரம் கூடியவன் உடம்பில் ஓடும் -குருதியும் சிவப்புத்தன் அன்பாந்த உறவுகளே சாதி என்ற வன் சொல்லை பயன்படுத்தி இனி காதலர்களை பிரிக்கவேண்டாம், அவர்களை வாழ வழிவிடுங்கள்
//சாதி குறைவானவனின் உடம்பில் ஓடும் -குருதியன் நிறம் சிவப்புத்தான், சாதித்தரம் கூடியவன் உடம்பில் ஓடும் -குருதியும் சிவப்புத்தன் அன்பாந்த உறவுகளே சாதி என்ற வன் சொல்லை பயன்படுத்தி இனி காதலர்களை பிரிக்கவேண்டாம், அவர்களை வாழ வழிவிடுங்கள்//
சிவப்புடன் சிவப்பு இணைய எவ்வளவு சிந்திக்க
வைக்கிறார்கள் …!
இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்ற வன் சொல்லைப் பயன்படுத்தி வாழவேண்டிய இளம் குடும்பங்கள் பிரிந்து வழக்காடு மன்றங்கள் ஏறி வாழ்வை சிதைத்து நிக்கும் குடும்பங்கள் எத்தனை ஆண்டவன் வகுத்தது ஆண்ஜாதி மற்றது பெண்ஜாதி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியண்ணா
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(இணையாத நேர்கோடுகள்(சிறுகதை))என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(சிறுகதையைப்) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
தங்களை அறிமுகம் செய்த விபரம் சொல்ல வருமுன்னே சென்று பார்த்தமைக்கு நன்றி நண்பா…
வணக்கம்
குமார்(அண்ணா)
வலைச்சரத்தில் என் வலைப்பூவை அறிமுகம் செய்து அதனை தெரியப்படுத்தியமைக்கு மிக நன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கதையின் கருத்து சிறப்பு… தலைப்பும் வித்தியாசம்… தொடர வாழ்த்துக்கள்…
வணக்கம்
தனபால்(அண்ணா)
உங்கள் வருகை மிக சந்தோசமாக உள்ளது கருத்துக்கு மிக நன்றியண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
nalla padaippukkaL.
vaazhthukkaL
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//சாதி குறைவானவனின் உடம்பில் ஓடும் -குருதியன் நிறம் சிவப்புத்தான், சாதித்தரம் கூடியவன் உடம்பில் ஓடும் -குருதியும் சிவப்புத்தன் அன்பாந்த உறவுகளே சாதி என்ற வன் சொல்லை பயன்படுத்தி இனி காதலர்களை பிரிக்கவேண்டாம், அவர்களை வாழ வழிவிடுங்கள்//
சிவப்புடன் சிவப்பு இணைய எவ்வளவு சிந்திக்க
வைக்கிறார்கள் …!
வணக்கம்
jayarajanprஅண்ணா
இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்ற வன் சொல்லைப் பயன்படுத்தி வாழவேண்டிய இளம் குடும்பங்கள் பிரிந்து வழக்காடு மன்றங்கள் ஏறி வாழ்வை சிதைத்து நிக்கும் குடும்பங்கள் எத்தனை ஆண்டவன் வகுத்தது ஆண்ஜாதி மற்றது பெண்ஜாதி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல முயற்சி ரூபன். பாராட்டுக்கள். இனி தொடர்ந்து வருகிறேன்.
வணக்கம்
டி,என்,முரளிதரன்(அண்ணா)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நீங்கள் வருகை தந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ,தொடருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கதை நன்றாக ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து படிக்க ஆவல்.
வணக்கம்
அம்மா
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றியம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஜீவனுள்ள கதைக்கு பாராட்டுக்கள் !
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்தாடல் இட்டு அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்கியமைக்கு மிக்க நன்றி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(இணையாத நேர்கோடுகள்(சிறுகதை))என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(சிறுகதையைப்) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-