குடும்பச் சுமையை
நெஞ்சில் சுமந்தாய்
வேலைச் சுமையை
கைகளில் சுமந்தாய்
வீறு கொண்டேழுந்து
நீ அழகாக -புன்னகைப்பாய்
உன் அங்கள் வலிக்க
உன் உயிரை மாய்த்து,
புது மனிதனாய்-என்னை
மண்னில் பிறக்கவைத்தாயே-தாயே
நீ பட்டினி கிடந்து
உன் பிள்ளையை, நீ சுமந்தாய்
தாயே நீ தாலாட்டுப்பாட
உன் மடியில் நான் உறங்கினேன்
தாலாட்டி சீராட்டி -வளர்த்த அன்னையே
உன்னை தரணியில் -புகழ்பாட
என் வாயினில் வார்த்தைகலே-இல்லை
உன்னை கற்பனைபண்ணி-கவிஎழுத,
என் மனதில் இருந்து
வார்த்தைகளும் வரவில்லை
உன்னை சொல்லால் -விளக்கமுடியாது,
நீ ஒரு அனிர்வசனியம்-தாயே
நித்தம் நித்தம் அன்புதனை-செலுத்தி
என்னை வளத்தெடுத்தாயே-தாயே
திக்கிடும் செய்தியை கேட்டால்
நீ திகைத்துப் போய்-நிப்பாயே,
நீ ஆதரவற்று தனியாக
கல்லறையில் -தூங்குகிறாய்
உன் சோகப் பரிவு -என் வாழ்வில்
பின்னிப் பினைந்து கொன்டே-இருக்குதம்மா,
ஆழ்கடலில் காற்றடித்து-திசைமாறிய
பாய்க் கப்பல் கரையை சேர
போராடுவது போல
என் மனம் அலைபாயுதே- உன்நினைவுகளில்
அம்மா உன் பிரிவின் -வலியை
தாங்கியபடி வாழ்கிறேன்-அம்மா