சர்வ வல்லமையும்-கொண்ட,
சர்வ சக்தியே-நீ
உண்னை சாதாரண-பெண்என்று
நான் நினைத்தேன்-ஆனால்
நீ சாதித்து சரித்திரம் படைக்க
பாரினில் அவதரித்த-புதுமைப்பெண்
பிள்ளைக்கு நல்ல-தாயாகவும்
அன்புக்கணவனுக்கு-நல்ல,துணைவியாகவும்
வாழ்வில் ஒளிவிளக்கு-ஏற்றினாய்,
என் இதயக் கோயிலே-நீ
சமாதியடைந்து விட்டாய்
உன் நினைவுகளுடன் வாழ்வதற்காய்
உன் நிழல் படத்தினை-என்
நெஞ்சில் தாங்கிய படி-வாழ்கிறேன்,
கார்கால மார்கழியில்,
கருமேகம் வானத்தில்-குடைசூழ,
முரசு முழங்குவது -போல,
இடிகள் முழங்குகிறது,
வானில் சந்திரனும்,
அழகிய வில் போன்ற-வானவில்லும் வளைந்து,
மலை உச்சிதனை தொடுவதை-போன்று
மேகங்கள் கடல் நீரை முகந்துகொண்டு,
வானவில் எழுந்து வானத்தை -வட்டமிட
இந்த கார் காலத்தில் -நீ சமாதியடைந்தாயே,
என் இதயக் கோயிலே-உன் புகைப்படத்தினை
என்நெஞ்சில் நிழல் -படமாக தாங்கியபடி
உன் நினைவுக் கீற்றில்-வாழுகிறேன்,
காற்று ஒருகனம்வீச- மறுத்தாலும்
பூவி கூட சுற்றாமல்- நின்றாலும்
உன்னுடன் சேர்ந்து வாழ்ந்த
காலங்களை நினைத்துப்பார்க்கையில்
நிஜமற்ற இவ்வுலகில்
நிஜமான அன்பையும்,
நிஜமான வாழ்வையும்,
நிறைய தந்தாயே,
என் இதயக் கோயிலே,
நீ வாழ்க நீ வாழ்க
அன்றோபறை சாற்றினான்-தமிழன்
ஒருத்தனுக்கு ஒருத்திஎன்று,
நீ இல்லை என்று -நினைத்து
நான் மறுமணம் செய்யமாட்டேன்
உன் நினைவுகளை -என் மனதில்
சுமந்தவாறு-நான் வாழ்கிறேன்
என் இதயக் கோயிலே,
நீ வாழ்க நீ வாழ்க,,,,,,,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் சுவாச காற்றே
என வாழ்க்கைத்துணை நலத்தை சிறப்பித்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்…
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
வணக்கம்,
Maniraj
என் சுவாசகாற்ரே,என்ற கவிதைக்கு பல வேலைகளுக்கு மத்தியில் வந்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி
உங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மலரட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புக்குரியோரை இழந்து, அவரின் நினைவிலேயே வாழ்வது, அவரின்மீது வைத்திருந்த ஆழமான, உண்மையான அன்பை காட்டுகிறது. தங்களது மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது அய்யா! ஆனால் எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை!
வணக்கம்
வே,சுப்ரமணியன்
என்சுவாச காற்ரே என்ற கவிதைக்கு பின்னூட்டம் இட்டு அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்கியமைக்கு மிக்க நன்றி அப்பன்,
நான் எதையும் இழக்கவில்லை கவிதையில் சொல்லிருக்கேன்
அனைவரும் படித்து பயன் பெறட்டும்,என்ற நோக்கத்துக்க எழுதப்பட்டது, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றியப்பா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மன்னிக்க வேண்டும் அய்யா! தவறிழைத்துவிட்டேன். உணர்ச்சி மிக்க கவிதை வரிகள் என்னை அப்படி கருத்துரைக்க செய்தது! தங்களின் மறுமொழி கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
அய்யா! தாங்கள் என்ன தமிழ் எழுதியை பயன்படுத்துகிறீர்கள் என தெரியவில்லை. இருப்பினும் சிறப்பான பலனை நான், google tamil input மூலம் பெற்றுவருகிறேன். தங்களுக்கு விருப்பமிருந்தால் தாங்களும் அதையே உபயோகிக்கலாம். ஏதேனும் உதவி தேவையென்றால் கேளுங்கள் அய்யா! (vsvmva@gmail.com) மிக்க நன்றி!
உங்கள் கருத்துக்கு நன்றி சுப்ரமணியன் தவறு நடந்ததுதான் எல்லாம் சரியாகி விட்டது,நீங்கள் கூறும் கருத்துக்கள் என்படைப்புக்கள் திறமையாக வெளிவர ஒரு உந்து சக்தியாக இருக்கும்,
இதுதான் பயன்படுத்துவது என்ன தமிழ் எழுதி ,(http://tamileditor.org/)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல கவிதை ரூபன். உங்களின் மன ஓட்டங்களை கவிதையில் உணர முடிகிறது.
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
வணக்கம்,
ரஞ்ஜனி(அம்மா)
என்சுவாச காற்ரே என்ற கவிதைக்கு பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றியம்மா,கவிதையில் உள்ள குறை நிறைகளை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றியம்மா என் படைப்புக்கள் திறமையாக வெளிவர உங்களின் கருத்துக்கள் என்னை ஆழ்மைப்படுத்தும்,
தயவு செய்து மன்னியுங்கள் இனி நடக்காது,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எத்தனை உண்மையான புகழாரங்கள்…
உங்களின் படைப்பு மிகவும் அருமை… வாழ்த்துக்கள்…
நன்றி…
வணக்கம்
திண்டுக்கல் தனபால் (அண்ணா)
என் சுவாச காற்ரே என்ற கவிதைக்கு பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி
அண்ணா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(என் சுவாச காற்ரே)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-