காப்பகம்
All posts for the month நவம்பர், 2012
உன் நினைவுக் கீற்றுக்கள்-என்
மனதில் புயலாக -எழுகிறது
இருந்தாலும்-என்னை
அழவைத்து அழவைத்து-என்னை,
ஏன் துடியாய் -துடிக்கவைக்கிறாய்
உன் நினைவுகள்-என் மனக்கதவுகளில்
பூட்டப்பட வில்லை
எப்போதும் திறக்கப்பட்டிருக்கிறது,
ஆனால் உன்மனதில்,
என் நினைவுகதவுகள்,
பூட்டப்பட்டது -ஏன்
சொல்லும் பெண்ணே-சொல்லும் பெண்ணே,
சில நேரங்களில்- உன்னை
என் மனக்கதவுகள் நினைக்க-மறுத்தாலும்,
நான் கை பிடித்து எழுதும்-பேனா
கண்ணீர் துளியை -விட்டு விட்டு
உன் ஞாபக அலைகளை
காகிதத்தை-நனைக்க வைக்குது,
நான் உனக்காக,
காதல் மடல் எழுதமறுத்தாலும்,
அந்த பேனா -மறக்கமாட்டாது,
அது எப்போதும் உன்-நினைவுக்
காற்றை வீசிக் கொன்டே -இருக்கும்,
ஏன் பெண்ணே -என்னை,
அழவைத்து அழவைத்து,
அழகு பார்கிறாய்,
இது உனக்கு -அழகா,
சொல்லும் பெண்ணே-சொல்லும் பெண்ணே
சிலமாதங்கள் சில வருடங்கள்
கடந்த நிலையில்
என் மனதுக்குள் காதல் -என்னும்
பாச உணர்வை -நீ சுவைக்க வைத்துவிட்டாய்,
நீ என்னை அழவைத்த -ஒவ்வொரு நிமிடங்களில்,
என் மனதுக்குள் புயல் அடித்தது,
என் மன உணர்வுகள் -மரணத்தில் சாய்ந்தது
நிலவு கூட தேய்ந்து-சில
நாட்களில் அது-முழுமை பெறும்
ஆனால்என்னை அழவைத்துவிட்டாய்-பெண்ணே
உன்னை அள்ளியணைக்க
என்கரம் -தழுவுதே,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சர்வ வல்லமையும்-கொண்ட,
சர்வ சக்தியே-நீ
உண்னை சாதாரண-பெண்என்று
நான் நினைத்தேன்-ஆனால்
நீ சாதித்து சரித்திரம் படைக்க
பாரினில் அவதரித்த-புதுமைப்பெண்
பிள்ளைக்கு நல்ல-தாயாகவும்
அன்புக்கணவனுக்கு-நல்ல,துணைவியாகவும்
வாழ்வில் ஒளிவிளக்கு-ஏற்றினாய்,
என் இதயக் கோயிலே-நீ
சமாதியடைந்து விட்டாய்
உன் நினைவுகளுடன் வாழ்வதற்காய்
உன் நிழல் படத்தினை-என்
நெஞ்சில் தாங்கிய படி-வாழ்கிறேன்,
கார்கால மார்கழியில்,
கருமேகம் வானத்தில்-குடைசூழ,
முரசு முழங்குவது -போல,
இடிகள் முழங்குகிறது,
வானில் சந்திரனும்,
அழகிய வில் போன்ற-வானவில்லும் வளைந்து,
மலை உச்சிதனை தொடுவதை-போன்று
மேகங்கள் கடல் நீரை முகந்துகொண்டு,
வானவில் எழுந்து வானத்தை -வட்டமிட
இந்த கார் காலத்தில் -நீ சமாதியடைந்தாயே,
என் இதயக் கோயிலே-உன் புகைப்படத்தினை
என்நெஞ்சில் நிழல் -படமாக தாங்கியபடி
உன் நினைவுக் கீற்றில்-வாழுகிறேன்,
காற்று ஒருகனம்வீச- மறுத்தாலும்
பூவி கூட சுற்றாமல்- நின்றாலும்
உன்னுடன் சேர்ந்து வாழ்ந்த
காலங்களை நினைத்துப்பார்க்கையில்
நிஜமற்ற இவ்வுலகில்
நிஜமான அன்பையும்,
நிஜமான வாழ்வையும்,
நிறைய தந்தாயே,
என் இதயக் கோயிலே,
நீ வாழ்க நீ வாழ்க
அன்றோபறை சாற்றினான்-தமிழன்
ஒருத்தனுக்கு ஒருத்திஎன்று,
நீ இல்லை என்று -நினைத்து
நான் மறுமணம் செய்யமாட்டேன்
உன் நினைவுகளை -என் மனதில்
சுமந்தவாறு-நான் வாழ்கிறேன்
என் இதயக் கோயிலே,
நீ வாழ்க நீ வாழ்க,,,,,,,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-