ஓடி ஓடி வாழ்ந்தது-போதும்
ஊர்மறந்து வாழ்ந்தது-போதும்.
எம் உறவுகள் கல்வியை -இழந்தது-போதும்.
எம் பண்பினை மண்னோடு-மண்னாக.
சிதைந்தது -போதும்.
வாருங்கள் எம் மாணவ-சமூதாயமே.
புது யுகம் படைப்போம்.
இனியேனும் இழந்த கல்வியை
நமக்காக -மீட்போம்.
ஒன்றாய் இரண்டாய் -றூறாய்.
துயரங்கள் எங்களை-துரத்திவர
குண்டுகள் விழுந்தாள்.
கோயில்கள் போனோம்
கோயில்கள் போனோம்-கடவுளைக்கானோம்
பள்ளிக்குப் போனோம்-பாடங்கள்கற்றோம்
அன்று அறிஞ்ஞர்கள் -கூட்டங்களாய் வாழ்ந்தோம்
இன்று மர நிழலில் வாழ்கின்றோம்.
வாழ்கையில் துன்பங்களை-சுமந்த.
சிலுவையை சுமக்கிறோம்.
துன்ப சுமையை இறக்க.
இனி கல்வி என்னும் -ஆயுதத்தை.
வாழ்கையில் சுமப்போம்
வாருங்கள் எம்-மாணவ சமுதாயமே.
புது யுகம் படைப்போம்.
இனியேனும் இழந்த கல்வியை
நமக்காக -மீட்போம்.
கல்வியில் முன்னேற -துடிக்கும்
எம் மாணவ சமுதாயமே.
கல்வி என்னும் இதமான காற்றினை-சுவாசிக்க.
நல்ல ஒரு மனிதனாய் உருவாக.
கல்வி என்னும் கலங்கரை-விளக்கில்
நாம் வாழ ஒற்றுமையாய் .
புது யுகம் படைப்போம்
இனியேனும் இழந்த கல்வியை
நமக்காக -மீட்போம்.
கல்வி என்னும் -நாதத்தை.
நம் மாணவ சமுதாயத்தின்
ஆழ் மனதில் ஒலிக்கவைத்து.
கல்வி என்னும் இலட்சியப்-பாதையில்.
உயர்வடையச் செய்வோம்.
அறிவில் சிறந்த -அதிபர்கள்.
அறிவில் சிறந்த -ஆசான்கள்
சிந்தனைத் துளிகளை-செவிமடுத்து.
ஒற்றுமையாய்-அணிதிரண்டு.
கல்வி என்னும் முடிவிலப் பயணத்தில்
புதுயுகம் படைப்போம்.
இனியேனும் இழந்த கல்வியை
நமக்காக -மீட்போம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான கவிதை… நல்ல கருத்துக்கள்… வாழ்த்துக்கள்…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6632.html) சென்று பார்க்கவும்…
நன்றி…
வணக்கம் .
திண்டுக்கல் தனபால்(அண்ணா)
என்னுடை படைப்புக்கள் வலைச்சரம் வலைப்பூவில் வந்து விட்டது எனக்கு தெரியாது நான் பார்ப்பதற்கிடையில் முற்கூட்டியே தெரியப் படுத்தி விட்டிர்கள் வாழ்த்துக்கள் (அண்ணா)
கவிதைக்கு பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி……..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் வலைச்சரப் பொறுப்பின் கடைசிப் பகுதியில் தங்களுடைய வலையகத்தை அறிமுகப் படுத்தியிருக்கின்றேன் என்பதனை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_6632.html
நன்றியுடன்,
சிவஹரி
வணக்கம் .
சிவஹரி
என்னுடைய படைப்பை வலைச்சரம் கதம்பத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. என்னுடைய வலைப்பூவுக்கு கிடைத்த மூன்றாவது வெற்றிப்படி என்றுதான் நான் நினைக்கின்றேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது….. தெரியப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
இன்று இறுதி நாள் பதிவாகி விட்டது எவ்வளவு கஸ்டத்துக்கு மத்தியில் பல வேலைப்பழுவுக்கு மத்தியிலும் சரியாக உங்கள் கடமையை சரிவர செய்திர்கள் மிக்க நன்றி…..நீங்கள் அறிமுகம் செய்த பல தளங்கள் பலவகைப்பட்ட கருத்துக்களை சொல்லிவிட்டது. அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுடையவையாகத்தான் உள்ளது. இருந்தாலும் நான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்து. சந்திப்போம்.சிவஹரி (அண்ணா)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கற்றோர்க்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு இல்லையா?
அதை உறுதிப் படுத்தும் வகையில் உங்களின் கவிதை வரிகள் அமைந்துள்ளன.
வலுவான சொற்களுடன் மனதில் பதியும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள் ரூபன்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!
வணக்கம் (ரஞ்சனியம்மா)
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லி விட்டிர்கள் அம்மா எது சரிதான்.இருந்தாலும் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டவனாக நான் உள்ளேன் நீங்கள் என் வலைச்சரத்தை முதலில் அறிமுகம் செய்திர்கள் தொடர்ச்சியாக என் படைப்புக்கள் வலைச்சரம் வலைப்பூவில் வந்து கொண்டு இருக்கிறது இதற்கு காரணம் என்னுடைதிறமை ஒருபக்கம் இருந்தாலும் உங்களின் மாசற்ற மனசுதான் முதல் காரணம் அம்மா.உங்களுக்கு பல தடவை நன்றி சொல்ல கடமைப்பட்டவன் நான்.
அனைவருக்கும் பயன் பெறும்படி பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றியம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மூன்றாவது முறையாக அதுவும் தொடர்ச்சியாக அறிமுகம் ஆகியிருக்கிறீர்கள் வலைச்சரத்தில்!
Hat trick அடித்திருக்கிறீர்கள்!
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
வணக்கம் (ரஞ்சனியாம்மா)
உங்களின் வற்றாத அன்பும் ஆதரவையும் பார்த்து நான் பிரமிச்சிப் போனேன் எனக்கு கிடைக்கும் ஒவ்வெரு வெற்றி மைக்கல்லும் முழுக்க முழுக்க உங்களுக்கே சாரும் அம்மா.ஏன் என்றால் என்னை நீங்கள் ஒரு படைப்பாளி என்று உலகரியச் செய்து விட்டிர்கள் நீங்கள் இன்னும் பால காலம் வாழ இறைவனை பிராத்திப்போம் அம்மா……
என்னுடை கவிதைக்கு வந்து பின்னூட்டம் இட்டு என்னை அகம் மகிழ செய்து விட்டிர்கள். வாழ்த்துக்கள் அம்மா. உங்களுக்கு பல தடவைகள் நன்றி….நன்றி….
(பந்து விளையாட்டில் தலையும் பூவும் விழுவது வழக்கம்தான்.)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள்
காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்றஉணர்வுகளுடன்
(வாருங்கள் கல்வியில் புதுயுகம் படைப்போம்.)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-