சோக உணர்வோடு
சோந்து கிடந்த
உள்ளங்கள் நாங்கள்.
எங்கள் சோக உணர்வை
சொல்லி சொல்லி அழுதோம்.
அகிலமெங்கும் பார்த்து-சிரித்தது
முதலைக் கண்ணீர் வடித்தார்கள்.
தசைகளும் சிதரியது.
மண்டையோடுகளும் -சிதரியது.
சின்னஞ்சிறு பாலகனும்-சிதரியது.
காய்த்துக் குலுங்கிய
தென்னை மரங்களும்
நிறைமாத கார்பினிக்கு-நாவில் சுவையூட்டும்.
புளிய மரங்களும்.
காற்றுக்கு இசைபாடும் பணை-மரமும்
வாடிக் கருகிப் போனது.
எங்கள் சோக உணர்வை-புரிந்து கொண்ட.
எங்கள் சொந்தங்கள் -கூட.
எங்களுக்கு-கைகொடுக்க வில்லை.
அவலக்குரலும் மரணபயமும்.
ஒருமித்து சங்கமித்தது.
எங்கள் வாழ்வில்.
கூப்பிட்டு கூப்பிட்டு-அழுதோம்.
கூவி கூவி குறைகளைச் சொன்னோம்.
அது புறக்குடத்தில் -ஊற்றிய
நீராக பயணற்றுப் போனது.
வாழ்வா சாவா என்ற
மரண வட்டத்துக்குள்
இலங்கைத் தீவில்சிக்கித் தவித்தோம்
இரத்த கறை படிந்த உடையுடனும்
கிழிந்த உடையுடனும்.
வீதியோரத்து அனாதைகள் -போல.
கையில் உயிரை பிடித்த -வண்ணம்
கை நழுவினால் உயிர் -நழுவும்.
என்ற மரன ஏக்கத்துடன்.
கரைபுரண்டோம்.
தெரிந்த எம் சொந்தங்கள் -கூட
எம் வாழ்வில் கைகொடுக்கவில்லை.
அதனால் மந்தைகள் வாழும்
குடிசையில் வாழ்கிறோம்.
எம் சொந்தங்கள் கைகொடுத்திருந்தாள்.
இப்போ.அழகாக மனிதன் -வாழும்
வீட்டினில் வாழவோம்.
இந்த நிலை எப்போது
தீரும்இறைவா?????
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தெரிந்த எம் சொந்தங்கள் -கூட
எம் வாழவில் கைகொடுக்கவில்லை.
உண்மைதான். இங்கும் அதே தான்!
எனது தள்த்திர்க்கு முதல் வருகைக்கு நன்றி.பிடியுங்க பூங்கொத்து [மாதேஸ்வரன் மதுரையில்]. அடுத்த தளத்தையும் வந்து பாருங்க.[தாமரை மதுரை]. நன்றி.
வணக்கம்
பத்மாசூரி..
என் தளத்துக்கு வருகை தந்து பின்னூட்டம் இட்டு அனைத்து வாசக உள்ளங்களுக்கும் பயன் உள்ளவாறு ஆக்கியமைக்கு மிக்க நன்றி….நன்றி..பத்மாசூரி.
அழுதோம் புரண்டோம் ,மண்ணோடு மண்ணாய் மாண்டோம் .
ஊர்மறந்து -வாழ்ந்தோம்
எம் உறவுகளை அறுத்த விட்டு கதரினோம்
எம்சொந்தங்கள் கூட அந்த நேரத்தில் கைகொடுக் வில்லை. அன்றுதான் அப்படி என்றால் ,இன்றும் அப்படித்தான் உள்ளது பத்மாசூரி இதுதான் மனித வாழ்கையின் ஜதார்த்தம். அடிக்கடி வந்து பின்னூட்டம் இடுங்கள்.வந்து கட்டாயம் உங்கள் தளத்தை பார்பேன்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சோகங்களை எடுத்துச்சொன்ன வரிகள், அருமையே.
பாராட்டுக்கள்; வாழ்த்துகள்; பகிவுக்கு நன்றிகள்.
விரைவில் நல்லது நடக்கட்டும். நிம்மதி கிடைக்கட்டும்.
அன்புடன் VGK
வணக்கம்
வைகோ.(ஐயா)
பெரியவன் சிறியவன் என்று பாராமல் ஒரு கவிதையோ சிறுகதையோ.படைக்கும் படைப்பாளிகளின் படைப்புக்கு பின்னூட்டம் இட்டு மகிழவைத்திர்கள் (ஐயா) மிக்க நன்றி.
உங்களைப் போன்றோரின் கருத்து என்படைப்புக்கு ஒருமகுடம்.(ஐயா) உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.எம்சொந்தங்கள் எத்தனை இன்னல்களை சந்தித்தோம் எம் சொந்தங்கள் கைகொடுக்கவில்லை.ஆனால் தமிழ்நாட்டுச் சொந்தங்கள்தான் கைகொடுத்துகொண்டு இருக்கிறது.அப்போதும்.இப்போதும்.
எனதுவலைப்பதிவில் (என்னைப்பற்றிய விபரத்துக்கு உங்கள் வாழ்த்து ஆசியை வந்துசொல்லுங்கள்.)ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வரிகள் மனதை உலுக்கின…
வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html) மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… தொடர்கிறேன்…
இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…
நேரம் கிடைத்தால்… மின்சாரம் இருந்தால்… என் தளம் வாங்க… நன்றி…
வணக்கம்
திண்டுக்கல தனபால் (அண்ணா)
என் வலைப்பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட்டு அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்கியமைக்கு மிக்க நன்றி தனபால் (அண்ணா)… கட்டாயம் உங்கள் வலைப்பூ பக்கம் போய் பார்ப்பேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் என் வாசக நெஞசங்களே.
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து பல வேலைகளுக்கு மத்தியில் என் வாசக நெஞ்சங்களுக்காக (சோகம் நிறைந்த வாழ்வில் சொந்தங்களும் கை கொடுக்க வில்லை). என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை படித்து அனைவருக்கும் பயன் உள்ள வாறு ஆக்க உங்கள் கருத்தை பதியுங்கள்
-நன்றி-
-என்றும்அன்புடன்-
-ரூபன்-