ஊரில் வாழ்ந்தது-போதுமென்று.
ஊர்மறந்து போகப் போகிறாயா.
பெற்ற பிள்ளையும் கட்டிய-மனைவியையும்.
உன் சொந்த பந்தங்களும் கதர கதர.
நீ கப்பல் ஏறி வெளிநாடு -சொல்லப் போகின்றாயா.
உன் இடைவிட்ட பிரிவாள்.
நான் தினம்…..தினம்….
செத்துப் பிழைக்கின்றேன்.
உன்மனைவி பிள்ளை பெரிதென்று-பாராமல்.
பணம்……பணம் -என்று.
உன் உள் மூச்சு வேண்டுதே.
நீ யார் இடமும் கை ஏந்தாமல்.
சுதந்திரமாய் வாழ்வதற்காய்.
நாலுபேருக்குள்-நல்ல
மனிதனாய் வாழ வேண்டும்-என்று.
உன் உள் நெஞ்சம் -துடிக்குதே.
அது எனக்கு நன்றாக -புரிகிறது
எனக்குகடவுள் எழுதிய எழுத்தோ-என்று.
எனக்கு தெரியவில்லை.
இருந்தாலும் உன்நினைவுகளில்-நான்.
தினம் தினம் செத்து செத்து வாழ்கிறேன்.
நீ அன்னியவன் நாட்டில்-இருந்து.
கற்றை கற்யையாய்-நீ
பணம் கொண்டு வந்து போட்டலும்-நீ
என் அருகில் இருப்பதற்கு இணையாகுமா?
சொல்லும் என் அன்புக் -கணவனே.
சொல்லும் என் அன்புக்-கணவனே.
நான் இல்லாவிட்டால்.
நீ மரணத்தின் விழிம்பில்
சாய்வாய் என்று-நான் நன்கு அறிந்தேன்.
என்னதான் செய்வதென்று-தெரியவில்லை.
உனக்காகவும் நம் பிள்ளைக்காகவும்.
என் உதிரத்தையும் வியர்வையும்
ஊனாக உருக்கி.
நம் வாழ்கையில் ஒளிவிளக்கு ஏற்ற.
உன்னை நான் சில.
ஆண்டுகள் பிரிந்து வாழ்கிறேன்.
நாம் ஊரில் -வாழ்ந்த காலத்தில்
நம்மிடம் பணம் இல்லை-என்று.
மாற்றானிடம் கையெந்தி -கேட்ட போது.
இல்லை என்று -சொன்னானே.
அந்த வடுக்கள் இன்னும்-என்
நெஞ்சில் அழியாமல்-இருக்கிறது.
அந்த இலட்சியத்துக்காய்.
சிறிது காலம் பிரிகிறேன்.
நீ பொறுமை காத்திடு.
என் அன்புக்குரிய பாசக் கிளியே.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இலட்சியத்துக்காய்.
சிறிது காலம் பிரிவும் கனக்கிறது
வணக்கம் (Maniraj)
உண்மையில் இலட்சிய வேக்கை உள்ள மனிதனும் .சாதிக்க வேண்டும் என்று நெஞ்சில் அனையாத தீபம் ஏற்றிவைத்துள்ள மனிதனும் தன் குடும்பங்களை பரிந்து வாழ வேண்டிய நிலைதான்
முதல்முதலாக என்வலைப்பக்கம் வந்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றியம்மா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீ சொன்ன வார்த்தையை நம்பி உனக்காக.கடற்கரை ஓரம் காத்திருந்தேன் நீ வருவாய்யென்று. அந்தி நேரத்தில் செவ்வானம் இளம் சிகப்பு பந்தல் போட.கடல அலைகள் தன் அலைக்கரத்தாள். தாலட்ட கடலலையை கட்டித்தலுவிய உப்பளக் காற்று. புத்துணச்சியலிக்க.உன் வருகைக்காக . காத்திருந்தேன் நீ வரவில்லையடி….மீனவன் காலையில் உறங்கி அந்தி நேரத்தில் மீன் பிடிக்க. கடற்கரையோரம் நிறுத்திய படகுகள் .மீனவனின் தாலாட்டப் பாட்டு. “ஏலோ ஏலோஏலோ….ஓ… ஐலசா……” “ஏலோ ஏலோஏலோ…ஓ…..ஐலசா……..” என்று தாலாட்டப்பாட தரையிலிருந்த படகுகள் கடலில் நீச்சல் போட்டது.தலையில் தலைப்பாகையும். தோழில் வலையும் அணிந்த படி புறப்பட்டான்.மீனவனின் தாலாட்டால் உன் வருகையை எதீர்பாத்து. காத்திருந்த நான் சற்று கண்மூடி தூங்கினேன்.மெதுவாக தலையை தூக்கி பார்த்தபடி உறங்கினேன். மாலதி அணிந்திருந்த கால் கொழுசு ஒளி. மண்னோடு மண்ணாய் ஒளி என் காதில் கசிய வைத்தது. சற்று எழும்பி அவள் வரும் பாதையை நோக்கி பார்த்தேன் அவள் வரகின்றால்.
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து கண் விழித்து எழுதப்பட்ட
கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதையை படித்து அனைவருக்கும் பயன் உள்ள வாறு பின்னூட்டம்.இடுக…பாசமிகு… வாசக உறவுகளே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-