முகவரி அறியாத உறவு
முழு நிலவு போல் வந்தது.
உன் முகவரி அறியாத உறவு
என் முகநூலில்-வந்தது.
எனக்காக நீ முகநூலில்
எழுதும் கவிவரிகள்
முகவரி அறியாத உன்
முகத்தை பார்க்க வைத்தது.
உன்முகவரி என்ன என்று
உன்னிடம் கேட்டேன்.
என் முகநூலில் சொல்லிவிட்டாய்
இரவும் பகலும் உறக்கத்தில்.
உன் முகவரி-என்
கண்ணுக்குள் ஓடிக் கொண்டிருக்கும்
நான் உன்மீதும் -நீ என் மீதும்
காதல் என்னும் நட்பை வளர்த்தோம்
உன் முகவரியை எடுத்து-நான்
ஊர் எங்கும் தேடிப்பார்த்தேன்.
உன் முகவரி எனக்கு கிடைக்கவில்லை.
அப்போதுதான்-நான் அறிந்தேன்
நீ தந்த முகவரி-பொய் என்று
பிரபஞ்சத்தில்-வாழும் எம்பாச உறவுகளே.
முகவரி தொரியாமல் காதலிப்பதை-விட
முகவரி அறிந்து காதலிப்பது-சிறந்தது.
என்று.அன்றுதான் உணர்ந்து-கொண்டேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-