அஜித் என்றாலே அழகுதான். அந்த அழகுக்கு அழகு சேர்ந்தார்போல் கொஞ்சம் தாடி மற்றும் மீசை மற்றும் தாடியை மலித்த தோற்றம் என இரண்டிலும் தல கலக்கலாக இருக்கிறார்.
சினிமாவில் இப்போது இருக்கும் ஹீரோக்களில் கோட் சூட் போட்டு ஹேண்ட்சம்மாக இருப்பவர்களில் இவருக்கே முதல் இடம். உண்மையிலே இவர் செம பர்சனாலிட்டி ஹீரோதான்.
அலட்டிக் கொள்ளாமல் நடிப்பதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு நிகர் அஜீத் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் படி வெளிவந்திருக்கும் படம் தான் பில்லா 2.
இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்கு வரும் டேவிட் பில்லாஇ அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகிறார். அகதிகள் முகாமில் இருக்கும் டேவிட் பில்லாவிற்கு ரஞ்சித் உள்ளிட்ட 3 பேர் நண்பர்களாகின்றனர்.
அப்பகுதி பாதுகாப்பு அதிகாரி சக அகதிகள் மீது நடத்தும் அடவாடித்தனத்தை கண்டிக்கும் டேவிட் பில்லா பாதுகாப்பு அதிகாரிக்கு எதிரியாகிறார். இதனால் பில்லாவை பழிவாங்க நினைக்கிறார்.
சென்னைக்கு மீன் ஏற்றிச் செல்லும் லாரியில் வைரத்தை வைத்து கடத்தும் கும்பலிடம் அஜித்தை சிக்கவைத்துஇ பழிவாங்க எண்ணுகிறார்.
மீனை ஏற்றிச் செல்லும் பொறுப்பை ரஞ்சித்தும்இ பில்லாவும் ஏற்கிறார். வழியில் சாதுர்யமாக தப்பித்துக் கொள்ளும் இருவரும்இ அதிலுள்ள வைரத்தை சென்னையின் பிரபல கடத்தல்காரரான செல்வராஜிடம் கொண்டு சேர்க்கின்றனர்.
இவர்களின் விசுவாசத்தை புரிந்து கொண்ட செல்வராஜ்இ இவர்களுக்கு சென்னையிலேயே சில கடத்தல் வேலைகளை கொடுக்கிறார்.
இந்நிலையில் கோவாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த போதைப் பொருளை சென்னையில் கைமாற்றிக் கொடுக்க செல்வாரஜை அணுகுகிறார் கோட்டி. அப்பொருளை கைமாற்ற தான் உதவி செய்வதாக பில்லா அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
கைமாற்றுவதில் ஏற்படும் தகராறில் ஒரு கொள்ளைக் கும்பலை அடித்து துவம்சம் செய்து விட்டுஇ கோட்டியின் தலைவனான அப்பாஸியிடம் நேரடியாக அந்த டீலை முடிக்கிறான் பில்லா. அதன்பிறகு அப்பாஸியிடம் சேர்ந்து கொண்டு சர்வதேச அளவில் கடத்தல் தொழிலில் கில்லாடியாகிறார் பில்லா.
சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் டிமிட்ரியின் பல கோடி ரூபாய் ஆயுதங்கள் இந்தியாவில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்கிறது.
அதனை பில்லாவை வைத்து கைப்பற்றி கொடுத்து டிமிட்ரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறும் அப்பாஸியை தன்னுடைய நாடான பரோவியாவிற்கு அழைப்பு விடுக்கிறான்.
அப்பாஸிக்கு பதிலாக கோட்டியும்இ பில்லாவும் பரோவியா செல்கின்றனர். அங்கு நடக்கும் பேச்சுவார்த்தையில் அப்பாஸியிடம் கலந்தாலோசிக்காமல் ஆயுத ஒப்பந்தத்தை முடிக்கிறான் பில்லா.
இது துளியும் திருப்தியில்லாத அப்பாஸி பில்லாவை தீர்த்துக்கட்ட நினைக்கிறான். இதிலிருந்து தப்பிக்கும் பில்லா முடிவில் அப்பாஸியையே தீர்த்துக் கட்டுகிறான். அதன்பிறகு ரஞ்சித் – பில்லா இருவரும் தனியாக இந்த பிசினஸை செய்ய முடிவெடுத்து களத்தில் குதிக்கிறார்கள்.
இதற்கு உதவும் சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் டிமிட்ரியையே ஒரு கட்டத்தில் பில்லா எதிர்க்கிறான். இதனால் ஆத்திரமடைந்த டிமிட்ரி அரசியல்வாதி மற்றும் அப்பாஸியின் உதவியாளர் கோட்டியுடன் கைகோர்த்துக் கொண்டு பில்லாவை தீர்த்துக் கட்ட எண்ணுகிறான்.
முடிவில் பில்லா அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கினாரா? இல்லை அவர்களை துவம்சம் செய்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் வித்தியாசமான முறையில் வசனம் பேசியிருக்கிறார் தல. தேவைப்படும் இடத்துல மட்டும் டயலாக். மற்ற இடங்களில் முகபாவணைகளிலேயே பேசுகிறார்.
அஜித்தின் அக்கா மகளாக வரும் பார்வதி ஓமனக்குட்டன் சில காட்சிகளே வருகிறார். அவருக்கு காதல் பண்ணுவதற்கும்இ நடிப்பதற்கும் வாய்பில்லாமல் போய்விட்டது.
இன்னொரு நாயகியாக புருனா அப்துல்லாஇ அவ்வப்போது கவர்ச்சியில் வருகிறார்.
சென்னை கடத்தல் தலைவனாக இளவரசுஇ கோவா கடத்தல் கும்பல் தலைவனாக சுதன்சு பாண்டேஇ சர்வதேச கடத்தல் கும்பல் தலைவர் வித்யூத் ஜம்வல் ஆகியோர் தங்கள் வேலைகளை மட்டும் செய்துவிட்டு போய்விடுகிறார்கள்.
குறிப்பாக “உக்காந்து வேலை வாங்குறவனுக்கும்இ உயிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு” மற்றும் “போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம்தான்… போராடிட்டு இருக்கிறவன் தோத்துட்டா அவன் தீவிரவாதிஇ ஜெயிச்சுட்டா அவன் போராளி” என்பன போன்ற வசனங்கள் தியேட்டர்களில் கைதட்டல்களை அள்ளிச் செல்கின்றன.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
unkada billa 2 vimarsanam parthan ,muyatsikku valthukkal,machchan,vimarsanam vithimuraippadi vimasikkappadanum, ithil 1.alakiyal kolkai 2.unarchchik kolkai 3.araviyal kolkai, 4. avayavaik kolkai, intha vidayankal adippadiyil vimarsikkappaddal vasakar mathiyil idam pidikkum,machchan
வணக்கம் (கிருபா)…..
உங்களின் கருத்தே…என் பயணத்தின் வழிகாட்டிகள்…கருத்து இட்டமைக்கு நன்றி(கிருபா)
வாசக உள்ளங்களுக்கு சில பேச்சு தமிழ் சொற்களை எழுதுவது ஏன் என்றால்… இலகுவில் விளங்கிகொள்வதற்காகத்தான்……கிருபா……உன் விமர்சன கருத்தை நான் முழு மனதாக ஏற்றுக் கொள்கின்றேன்…கருத்தாடல் இட்டமைக்கு மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் வாசக நெஞ்சங்கலே
பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் பில்லா பாடத்தின் திரை விமர்சம் எழுதப்பட்டுள்ளது.எப்படி
(தல ) பில்லா “2” எப்படி அமைந்துள்ளது என்ற கதைக் கண்ணோட்டத்தை மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது படித்த பின் மறக்காமல் பின்னூட்டம் இடவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-