என் உறவுப் பாலமே.
நீ வற்றாத ஜீவ நதி.
உந்தன் அழகில் நான்-மயங்கி
சிக்குண்டு தவியாயை -தவிக்கின்றேன்
நீ என்னை ஒரு முறைதான்-பார்த்தாய்
ஆனால் நான் தினம் தினம்
உன்னைப் பார்க்கின்றேன்
பகல் ஒன்று வந்தாள்
இரவென்ற ஒன்று இருக்கு
ஆனால் எனக்கு இரவும் பகலும்
என் உள்ளத்துக்கு ஒன்றாக-தெரியுதடி
இதமாக இருந்த என் இதயத்தை
பாலை வனமாக மாற்றி விட்ட-நீ
நீ ஒருமுறை என்னை -நீ பார்த்து
நீ கொட்டிய புன்னகையில்-மயங்கினேன்
அடி பெண்னே உன் சிரிப்பில்
மாய மந்திர வித்தையா-வைத்திருக்காய்
சொல்லுமடி பெண்னே…..சொல்லுமடி பெண்னே…..
பெண்னின் சிரிப்பில் அகம் மகிழ்ந்து
இராட்சியங்களை இழந்த மன்னன்
பரம்பரையில் நானும்-ஒருவனாய்
அந்த வரிசையில் இருக்கின்றேன்
நான் கிட்ட கிட்ட நெருங்கி வருகையில்
நீ ஏன் தள்ளி தள்ளிப் போகிறாய்
இப்போ உனக்கு புரியாது
காதல் என்னும் வயிரசு
உனக்கு போக போகத்தான் புரியும்
காதல் வயிரசு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்கலே (காதல் வலையில் சிக்கினேன்) என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை அனைவருக்கும் பயன்உள்ளவாறு ஆக்கஉங்கள் பின்னூட்டத்தை (மறுமொழி இடுக) என்ற இடத்தில் எழுதுக.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-