தெய்வத்தின் மேல் தெய்வம்
எங்கள் கண்கன்ட-தெய்வம்
தாயும் தந்தையும் அல்லவா?
தரணியில் புகழ் படைத்து
புது வாழ்க்கை அமைத்துக் கொடுத்த
எம் இதய தெய்வங்கள் -அல்லவா?
அவர்கள் அல்லவோ-நம்
தாயும் தந்தையும் -அல்லவா
குட்டிப்பையானக வாழ்ந்த காலத்தில்
சுட்டிப் பையனுக்கு அன்னையானவள்-கையால்
சோறு பிசைந்து உருண்டை வடிவில்-தருவள்
அது சுவையிலும் சுவையப்பா-
அது சுவையிலும் சுவைதான்.
அன்று சிறியவனாய் இருக்கையில்
கடந்த கால நினைவுகள்-என்
சிகரத்துக்கு எட்ட வில்லை-இன்று
பெரியவனாய் இருக்கும் போது
கடந்த கால நினைவுகள்-எம்மை
ஒருகனம் தடம் புரட்டிப் போட்டது.
பாலகப் பருவத்தில் பள்ளியில்- படிக்கையில்
சக மாணவர்களுடன் கை-கோர்த்து
சிரித்து மகிழ்ந்த காலங்களும்
பள்ளியில் ஒன்றையாய் படித்த -நண்பர்கள்
இன்று எந்திர வாழ்கையை -தேடி
வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்
ஒன்றாக படித்த எத்தனை -நண்பர்கள்
தன் துணை தேடி மணவாழ்கையில்-புகுந்து விட்டார்கள்
எத்தனை பேர் மரணத்தை தளுவி விட்டார்கள்
ஒன்றாக பழகிய உறவுகள் -எத்தனை போர்
தற்காலிக பரிவுகளாகவும்.
நிரந்தரப் பிரிவுகளாகவும்-ஆகி விட்டார்கள்
அந்த கடந்த கால -நினைவுகளை
நினைத்துப் பார்கையில்-கடந்த காலநினைவுகள்
ஒருகனம் எம் இதயத்தை துடிக்க வைக்கிறது.
பள்ளிக்கூடம் விட்டவுடன்
எம் செம்மண் வீதியிலே
கிட்டியும் புள்ளும் -விளையாடினோம்
அதிலு ஒற்றையடியா-இரட்டையடியா?
என்று அடித்து மகிழ்வதுதான்.
அது மட்டுமா விளையாட்டில்.
ஜெயிக்க வேண்டும்-என்று
இறு மாப்புடன்-மூச்சி விடாமல்
“ஆலயிலே சோலையிலே”
“ஆலம்பாடிச் சந்தியிலே”
“கிட்டியும் புள்ளும் கிறுவியடிக்க”
“பாலாறு…….பாலாறு……..பாலாறு”…..என்று
மூச்சி விடாமல் கிட்டியும் புள்ளும் -விளையாடும்
குழியை நோக்கி -ஓடுவதுதான்
எம் நண்பர்களுடன்-விளையாடிய.
காலங்களை நினைக்கையில்
எம் மனக் கதவுகள் திறக்கப்படுகிறது
கண்களில் இருந்து கண்ணீரும்-வடிகிறது.
மே.ஏப்பரல் என்றால்-ஒரே
கொண்டாட்டம் என்னவென்றால்
வரண்ட காற்று வீசும் காலம்
காலையில் சாப்பிட்டல்
10 மணிக்கும் 11.மணிக்கெல்லாம்
வரிசையாக நின்று
பட்டம் விட்டு விளையாடுவதுதான்
அந்த வேலையில் ஆகாயத்தில்
பல பல வண்ணங்களில்-பட்டம் பறக்கும்.
யார் பட்டம் உயரப் பறப்பது-என்ற.
ஆதங்கத்துடன் எல்லோரும்-கூட்டமாக
நின்று பட்டம் விட்டு மகிந்தோம்
கடந்த கால நினைவுகளை
ஒரு கனம் மீட்டுப் பார்த்தேன்
என் மனதில்தோன்றிய
நினைவுகளை சொல்லிருக்கேன்
எம் நெஞ்சங்களுக்காக…….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
Reblogged this on ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.
வணக்கம் உறவுகலே.
கடந்த கால நினைவுகள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை படித்த பின் உங்கள் பின்னூட்டம்இடுக.
நன்றி என் வாசக நெஞ்சங்கலே
-அன்புடன்-
-ரூபன்-