நீ என்னை உன் வயிற்றில் சுமந்தது -குற்றமா தாயே
நீ சுமந்தனி எனை ஈனறெடுத்தது-குற்றமா தாயே
இதுதான் அப்பா இதுதான் அண்ணாவென்றது-குற்றமா தாயே
உன்சொந்தபந்தங்களை காட்டியது-குற்றமா தாயே
நீ என்னைசீராட்டி தாலாட்டி வளர்த்தது-குற்றமா தாயே
உன்பசியைபொறுததுக் கொண்டு என்பசியை தீர்தாயோ அது-குற்றமா தாயே
உன் பிள்ளை என்றுஉன் மடியில்உறங்க வைத்தது-குற்றமா தாயே
இல்லை உன்னை அம்மா வென்று அழைப்பது-குற்றமா தாயே
நீ போகும் இடமெல்லாம் உன் பின்னால் வருவது-குற்றமா தாயே
உன் சேலை முந்தாணியில் பிடித்து வருவது-குற்றமா தாயே
இல்லை மகனே நீ ஒரு குற்றமும் செய்ய வில்லை
நீ அப்படி கேட்க வேண்டாம் மகனே
உன்னை நான் ஈன்றெடுத்தற்காக-கோடி
தவம் இருக்க வேண்டும் -மகனே
உன் பிஞ்சு உள்ளம் வடலியில் வாட.வாட
உன்னை தயாக விட்ட பாவப்பட்ட-ஜென்மம் நான்
என்னதான் செய்வது-மகனே
இறைவன்வரம் இப்படி அம்மாவுக்கு
நான் ஒருதொழு நோயாளி மகனே
உன்பிஞ்சு உள்ளம் பரதவிக்க
தனியாக விட்டு விட்டேன்-மகனே
உன்கொடுமையை-பார்க்க
தாயுள்ளம் பதறுது-மகனே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்ன பிழை செய்தேன் தாயே!!!,,,,
என்ற கவிதையை படித்த பின் அனைவருக்கும்பயன் உள்ளவாறு பின்னூட்டம் இடுக
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-