நீ வருவாயா நீ வருவாயா-என்று
என் மனதில் தென்றல் புன்னகை
பாலை வனமாக இருந்த-என்
இதயம் நீ வருவாய் என்று
நேற்று பெய்ந்த மழைக்கு
துளிர்த்த பசும் புற்கள் போல
இதயத்தில் புன்னகை மலர்ந்தது
நீ வருவாயா நீ வருவாயா-என்று
சொன்னவுடன்-நான்
உன் அழகை பார்ப்பதற்கு
மனமே துள்ளிக் குதிக்குதடி
வில் போன்று வளைந்த-உன்
நெற்றிப் புருவமும்
காந்த மலர் போன்ற கண்னும்
கொவ்வைப் பழம் போன்ற-உதடும்
அன்னப் பறவை போன்ற -நடையும்
உன்னைக் கண்டவுடன்
என்னை கொள்ளை கொள்ள வைத்ததடி
கடல் அன்னை-கரைக்கு
கொடுக்கும் முத்தம்
உணர்ச்சிகள் மேல்-எழுந்து
எப்படி ஒலி உண்டாகுதோ
உன் உதடுகளில் இருந்து
வரும் முத்தம்-பன் மடங்கு
இன்ப உணர்வைக் கொண்டதடி
அந்தியில் செவ்வானம் பந்தலிட
உலகுக்கு ஒளி ஊட்டும்-நாயகன்
ஒளியை மறைத்து-இருளை
கொடுக்கும் நேரமும் வந்தடி
மந்தைகளும் இருப்பிடம்
நோக்கி போகுதடி
பறவையும் தன் வீடு-தேடி
உறக்கத்துக்குப் போகுது
ஆனால் நீ மட்டும்
ஏனடி உன் காதலனை-தேடி வரவில்லை
நீ வருவாயா நீ வருவாயா-என்று
நான் காத்திருந்தது மட்டுந்தான்-மிச்சமடி
ஏனடி என்னை இப்படி
நீ வருவாய் நீ வருவாய்-என்றுசொல்லியும்
என்னை சொல்லாமல் -கொள்கிறாய்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
உறவுகலே
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து என்வாசக உள்ளங்களுக்கு
(நீ வருவாயா நீ வருவாயா) என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை அனைவருக்கும் பயன் உள்ளவாறு பின்னூட்டம் இடுக
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-