அன்பே உன் நினைவுச் சுவடுகளை
நித்தம் நித்தம் சுமந்து கொண்டு
உன் நினைவலையில் வாடுகின்றேன்
நீ என்னை காதலிக்கும்- போது
நீ உயிர் ஊட்டி வார்த்த வார்த்தைகள்
ஒவ்வென்றும் என் அடி நெஞ்சை
ஒரு கனம் புரட்டிப் பார்க்குது-அன்பே
நீ உயிருடன் இருக்கும் போது
என் நினைவுகள் தினம் தினம்
உன்னிடம்- ஆனால்
எனக்காக நீ வரைந்த
வாழ்துமடல்-சுவடுகள்லுடன்
தினம் தினம் வாழ்கின்றேன்,அன்பே
நீ காதல் நினைவுக்காக-வரைந்த ஓவியத்தையும்
நீ எனக்கு பேனாவின் கண்ணீர்த்துளியால்
எழுதிய கவிதையை-நித்தம் நித்தம் பார்த்து
என் கண்ணீரில் இருந்து
கண்ணீர் துளிகள் வடியுதடி-அன்பே
அன்பே நீஎன்னை விட்டு
நிரந்தரமாய் போய் விட்டாய்
ஆனால் உன் ஆத்மா
என்னைப் பற்றி நினைக்கும்
என் காதலன் வேறுமனம் செய்து-விட்டானா?
என்ற ஞாபக நினைவலைகள்
உனக்குள் ஊசலாடும்
அப்படியில்லை,வாழ்ந்தால் உன்னோடுதான்
என்ற உறுதி மொழியை தினம் தினம்
உன் கல்லறையில் பூசித்து வருகின்றேன்-அன்பே
நீ கண்னுக்கு தூரமாய்
என் கண்னுக்கு-உயிராய்
கல்லறையில் வாழ்கிறாய்
உன் நினைவுகள் எனக்கு-சுமையில்லை
உன்கல்லறை சுவருடன்
வாழ்கிறேன்-அன்பே
என் இமைகள் மூடும் போதெல்லாம்
உன் நினைவுகள்-என்னை
தென்றலாய் வந்து தாலாட்டுதே-அன்பே
என் கற்பனைகள் உதயமாகும் போதெல்லாம்
உன் அன்பேன்னும் சுவடுகள்-மட்டும்
எனக்கு ஆறுதலாய் -உள்ளது அன்பே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து என் வாசக உள்ளங்களுக்கு
அன்பே உன் நினைவுச் சுவடுகள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை படித்து
உங்கள் கருத்து மடல் இட்டு அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்குக.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-