சிட்டுக் குருவி போல-சுதந்திரமாய்.
வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று
சிதர்உண்டு சிதையுண்டு
சின்னாபின்னமாகினார்கள்
சுதந்திரக் காற்றினை ஓர் அளவு.
சுவாசித்து வாழ்ந்த எம்மினம்
இன்று வாழ்விடம் இழந்த
அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
வாழ வேண்டும்மென்று -பிறந்த
எம் வாலிபர்கள்-என்ன பிழை செய்தார்கள்.
செய்யாத தப்புக்கு சில ஆண்டு சிறைவாசம்.
அந்த கொடுமையின் வேதனையை பாருங்கப்பா?
சிறைவாசம் வாடும் பிள்ளையை-பார்க்க.
ஈன்றெடுத்த தாயானவள்-கையில் பணம் இல்லாமல்.
பிச்சை எடுத்து பார்க்கப் புறப்படுகின்றால்
பெற்ற பாசம் சும்மா விடுமா???
எங்கள் தமிழ் இனம் அன்றும்- இன்றும்
வாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
ஏர் பிடித்து நிலம் உழுது
வாழ்ந்த எம் தமிழ் இனம்
இன்று பாத்திரம் ஏந்தி-ஒருசான் வயிற்றுக்கு
வீதி ஓரமாய் நின்று பிச்சை எடுக்கும்
காலம் வந்து விட்டதய்யா………….
இந்த அவல வாழ்கைக்கு தள்ளப்பட்டு விட்டோமே.
எம் தமிழ் இனம் வந்தாரை வா என்று
அழைத்து விருந்தோம்பும் பண்பு.
கொண்ட எம் தமிழ்இனம்-இன்று
வா.வா.என்றுநம்ம அழைத்தவர்கள்-இன்று.
நமக்கு விருந்தோம்பல் செய்கின்றார்கள்.
இது காலத்தின் தண்டனையா?-அல்லது.
இறைவனின் தண்டைனையா?
அன்றும் இன்றும் எம் தமிழ் இனம்
வாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
இதையும் தட்டிக் கேட்க -யாரும் இல்லையா?????
அடிமைகள் போல வாழ்விடம்
இழந்த அனாதைகள் போல வாழ்கிறார்கள்.
எம் தமிழ்இனம்.
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து கண் விழித்து இரவையும் பகலையும்
பாராது படைத்த என் கவிதை (வாழ்விடம் இழந்த அனாதைகள்) என்ற கவியை படித்து அனைவருக்கும் பயன்உள்ளவாறு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
வணக்கம்
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து கண் விழித்து இரவையும் பகலையும்
பாராது படைத்த என் கவிதை (வாழ்விடம் இழந்த அனாதைகள்) என்ற கவியை படித்து அனைவருக்கும் பயன்உள்ளவாறு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-