விழியோரம் கண்ணீரைச்-சுமந்து
வலியோடு தாங்கி
வலியோடுவயிற்றில்-நீ சுமந்தாய்.
உன் கருவறையில் நான் -வாழும் போது
எட்டி எட்டி எத்தனை தடவை-உதைத்திருப்பேன்
அந்த வலியையும்-விழியோரம் தாங்கி.
கண்ணீர் வடிய வடிய
பொறுமை காத்தாயே-தாயே.
உன் வயிற்றில் இருந்து-பூமா தேவியில்
குதித்தவுடன் நீயடைந்த இன்பம்-மேல்தாயே
உன் பிள்ளை கண்ணீர் வடிக்கையில்
உதிரத்தை பாலாக்கி-பசி தீர்த்தாயே
உன் பிள்ளையின் பசி போக்கி
மழளை மொழியில்-சிரிக்கையில்
உனக்கு. பசியே வரமாட்டாது தாயே.
விழியோரம் கண்ணீர் வடித்து.வடித்து.
வலியோடு என்னை சுமந்தாய்.
என்னை இளமை வரை வளர்த்தாயே-தாயே.
இரவென்றும் பகல்என்றும் பாராமல்
நீ.பட்ட துன்பத்தை நான் அறிவேன்- தாயே.
நீ என்னை இளமை வரை வளத்து விட்டாய்
ஆனால் உன்னை முதுமை வரை-பார்க்க
நீ இருக்க வில்லை தாயே.
இப்போ உன் மகன் உயர் பதவியில்-இருக்கின்றேன்.
அதைப் பார்க்க நீ இல்லை -தாயே
நீ உயிருடன் இருந்திருந்தாள்
உன் மகனை பார்த்து-நீ
ஆனந்த புன்னனக பூத்திருப்பாய்.
உன் நினைவுகளை சுமந்து -கொண்டு
தனிமையில் வாழும் போது.
என் விழியோரம் வலிகள்-தாங்கிய
கண்ணீ வடிக்குதம்மா.
என் துன்பத்தை அறிய-நீஇல்லை தாயே.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக அழகான கவிதை!
பெண்ணவள் கர்பநியாக இருக்கும் போது பல கற்பனைகள் கொண்டிருப்பாள்!
கருவை கொண்டதும் மகிழ்ச்சி கொள்ளும் , நாளாக நாளாக குழந்தையின் எதிர்காலம்,அதன் வளர்ச்சி, கணவன் மனைவி உறவு, என்ற பல கற்பனைகள் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பாள்!
அத்தனையும் பல சில முடிவுகள் தெரியாது கேள்வி குறியாக இருக்கும்!
ஆனால் பிள்ளையாக கருவை பெற்றெடுக்கும் அக்கணத்தில் கற்பனைகள் களைந்து நிலையான இன்பம் கொள்வாள்!
காரணம் தன்னையும் தாயாக்கிய ஒரு ஜீவனை பெற்றெடுத்த திருப்தி!
இது ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருமென நினைகிறேன்!
வணக்கம் ஜோதி,
வலிகள் தங்கிய கண்ணீர் என்ற கவிதைக்கு கருத்து மடல் இட்டு. அனைவருக்கும் பயன்
உள்ளவாறு ஆக்கியமைக்கு நன்றி .
-அன்புடன்-
-ரூபன்-
Reblogged this on ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.
வலிகள்தாங்கியகண்ணீர்என்றதலைப்பில்எழுதப்பட்ட கவிதையை படித்த பின்
அனைவருக்கும் பயன் உள்ளவாறுஆக்குக உங்கள் கருத்தை பதியுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-