அன்பே ஆருயிரே…..என்
அருமை றோஜாவே!……….
கணவனின் விழிப்பு மொழியாம்!!
முத்து முத்தான கணவனின்-கையெழுத்தை.
அவளின் விழிகளில் வழிந்த
முத்து முத்தான கண்ணீர் துளிகள் -நனைத்தன.
கணவனின் கையெழுத்து கவிதையை.
மெல்ல மெல்ல படிக்க.
றோஜாவின் மனப் பதட்டம் தளர்ந்தது.
உயிரும் மெய்யும் புணையப்பட்டு
உயிர் கொடுத்த உயிர் எழுத்துக்களை.-படிக்கையில்
நான் இறைவனடி சேர்ந்து இராண்டு ஆயிற்று.
என்பதை நீ அறிவாய்.
என் இறப்பை நீ தாங்குவதற்குள்.
உன் இறப்பு வந்து விடும்
என்பதை நான் அறிவேன்.
வானி இல்லாத நிலாப் போல.
நான் இல்லாமல் -நீ
என்ன செய்வாய் கண்ணே!!!!!!
நாம் வாழ்ந்தபோது ஒவ்வெரு-நாளும்
நமக்கு அன்பர் தினந்தான்
ஆனால் என் றோஜாவிடம்
றோஜாகள் மட்டும் இருக்காது.
உன் கன்னங்களைத் தவிர.
அழாகான வாழ்கை என்பதை.
அன்பான வாழ்கை என்றும்
கற்றுத் தந்தவள் -நீஅல்லவா?………….
எனக்கு பெருத்தமான காதலியும் -நீ.
மனைவியான உன்னை –என்
என் உயிரி மூச்சாக சுவாசித்தேன்.
உன் உயிர் துடிப்பை
எப்படி வெள்ளைக் காகிதத்தில்-வடிப்பது.
தயங்காமல் உன்னை வடிக்கின்றேன்.
எனக்கு தாயும் நீதான்.
எனக்கு தாரமும்- நீதான்
எனக்கு தாதியும்-நீதான்
உன்னைப் பற்றி- சிந்திக்காத.
மணித்தியாலயங்களும்-கிடையாது.
நிமிடங்களும் கிடையாது.
வருஷம் ஒன்றாகி விட்டது.
எனக்காக நீ கண்ணீர் சிந்த வேண்டாம்
அன்பர் தினத்தன்று.
அன்புப் பரிசாக-என் றோஜாவுக்கு.
நான் அனுப்பிய றோஜாப் பூக்கள்
உன் கைக்கு வருமடி.
இந்த றோஜாப் பூக்கள்
வெறும் பூக்கள் அல்ல.
உன் துயரை துடைக்க வந்த தூதுவர்கள்
அன்பே உன் அன்பு
மகத்தானது என்பது- உண்மை.
என் மரணத்தை மறந்த விடு.
என்று ………சொல்வது போல.
றோஜாக்கள் ஒவ்வெரு ஆண்டும்.
அன்பர் தினத் அன்று.உன்னை –நாடிவரும்.
உன்னை நான் தேடி வருவது-போல.
ஒவ்வெரு ஆண்டும் பிப்பரவரி-14இல்.
நீ தூங்கயில்-பூக்காரி.
உன் வாசல் மணியடிப்பாள்.
ஆனால் எப்போதாவது-ஒரு தினம்.
மணியோசை உன் செவிகளில்-விழாவிட்டால்.
உன் வாசல் கதவு திறக்கப்பட விட்டாலும்.
பூக்காரி சாளைக்க மாட்டால்.
ஐந்து முறையாவது –உன்
இல்லம் நாடி வருவாள்
இல்லாவிட்டால் அக்கம் பக்கம் விசாரிப்பாள்.
நீ தங்கையாக கருதும் பூக்காரியிடம்.
நான் முன்பு சொல்லி வைத்தது போல்.
என் கல்லறைக்குப் பக்கத்தில்-நீ உறங்கு.
உன்கல்லறையில் றோஜாக்களை.
உன்னை தொந்தரவு செய்யாமல்
வைத்து விடுவார்கள்.
மீண்டும் ஒன்றாக சொர்க்கத்தில்-இணைகின்றோம்.
என் கண்ணே!!!!!!!…. றோஜா.
நீ முத்தமிட்ட றோஜா
கண்ணீரில் கரைந்து விட்டதுஎன்று-நினைக்காதே!!
அது சொர்க்கத்தில் கண்டிப்பாக
முத்தமிடும்.-றோஜாவே.
றோஜாக்கள் என்றும்-உனக்காகத்தான்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-