தேக்கு மரச் சோலையில்.
தேம்மாங்குகாற்று வீசுதடி.
தேகமெல்லாம் நடு நடுங்க.
தேம்பி தேம்பி நான்-அழுத
கார் மேகம் கார் இருளை –கொண்டவர.
வானவழி கண்ணீர் வடித்ததடி.
விட்டு விட்டு எரியும்.
மின் குமிளைப் போல
ஆகாய வானிலே-மின்னல்.
வெட்டி வெட்டி எரியுதம்மா.
மங்கள வாத்தியம்-இசையை.
இடிமுளக்கம் இசைத்திடவே.
ஏரியில் இருந்து தவளைகள்
வயலின் இசை இசைக்க.
ஆந்தைகள் ஆங்காங்கே
சல்லாரி தட்டுதடி.
உன் நினைவாலய முற்றத்திலே.
பள்ளி என்னும் பாசறையில்
படித்த- நீ.
பாசமாய் நேசமாய் -கருணை காட்டினாய்.
நீ கற்ற பள்ளியில்-மலரும்.
பூஞ் செடியிடம் கேட்டுப்பார்.
உன் பெயர் சொல்லும்.
பள்ளி முற்றத்திடம் கேட்டுப்பார்
உன் கால்தட சுவடுகளை சொல்லும்.
உன் கால் சுவடுகள்
அதிரும் ஓசையை முற்றத்திடம் கேட்டப்பார்
அழியாத சுவடுகளாய் வாழ வேண்டிய நீ
பிஞ்சுப் பருவத்தில் உதிர்ந்தாயடி.
உன் நினைவாலய முற்றத்தில்
எண் எண்ணங்கள் திகட்டுதடி
மாண்டவர்கள் யாவரும்.
இறைவனின் குழந்தையடி.
என்று சொன்னார்கள்-ஆன்றோர்
நீயும். இறைவனின் குழந்தைதானடி.
வீதியின் அருகே அமைந்தது.
உன் நினைவாலயம்
எங்கள் வீடுவரை-உன்
உன் நினைவலைகள் படருதடி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் உறவுகலே.!
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சிசெய்து (நினைவாலயம்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுஉள்ள கவியைபடித்து மறக்காமல் பின்னூட்டம் கொடுக்கவும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-