வானத்தில் மலரும்-சந்திரனின்.
தேவதை-நீ
வாழ்கையை வாழவேண்டுமென்று.
போர்தொடுத்த வீரச்சி-நீ
சேலைகட்டி நீ வந்தால்.
சோலைவனப் பறவையும்.
அருகே நிக்காது.
சோலைவனப் பறவையின்-அழகான
கண் வழிகளையும்-கொண்ட.
தேவதையே-நீ வாழ்க.
சோர்வு உள்ளம் இல்லாமல்
இறக்கையை விரித்துப் பறக்கும்.
சோலைவனத்துப் பறவை போல-நீ
தாவணி பாவடை கட்டி.
வீதியில் நடக்கையில்
சோலைவனப் பறவையின்
இறக்கையைப் போன்றதடி.
உன் தாவணி பாவடை
காற்றில் ஆடுமடி.
பருவம் வந்து-பாய்விரித்து
வீட்டில் தூங்கையில்
பாவை உன்னை –தேடி
நான் வந்தேனேடி
உன்னை தொட்டு –நான்
எழுப்பயில்-நீ
கண்னை மூடி தூங்கினாயடி
நான் நினைத்தேன்-நீ
நித்திரைத் தூக்கமென்று.
ஆனால் அது உனக்கு
நிரந்தர தூக்கமாய்-போனதடி
சோலைவனப் பறவையை-வாழ்ந்த நீ
உயிரற்று நிரந்தரமாய்-தூங்கினேயடி
என் சோலைவனப் பறவையே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் என்வாசக நெஞ்சங்கலே வணக்கம்
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து என் வாசக நெஞ்சங்களுக்காக
சோலைவனப் பறவை என்ற கவிதையை படைத்துள்ளேன் வாசித்து மறக்காமல் பின்னூட்டம்
கொடுக்கவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-