சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை)
மாலாவும் அவளுடைய நண்பி லீலாவும் ஒன்றாக ஒரே கம்பனியில் வேலை செய்கின்றார்கள் இரண்டு பேரும் தேனீர் இடைவேலை நேரத்தில் சிற்றுண்டி சாலையில் சிற்றுண்டி உண்டபடி தங்களின் எதீர் காலாம் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள் இப்படியாக இருவர் நட்பும் வெகு நீண்ட நாள்களாக ஓடிக் கொண்டு இருந்தது.
மாலாவின சகோதரங்கள் மாலாவின் கணவர்; இறக்க முன்பு மாலாவின் வீட்டுக்கு வருவதில்லை. ஒரே ஒரே தங்கச்சி இருக்கின்றாள் என்று கூட மனதால் கூட நினைத்து கூட பார்ப்பதில்லை. இதனால் மாலாவும் இந்த விடயத்தை கருத்தில் கொள்வதில்லை. இதனால் அவளுடைய மனதில் ஒரு வெறுப்புத் தன்மை ஏற்ப்பட்டது. நம்மட அண்;ணா சகோதரந்தான் நினைத்துப் பார்ப்பதில்லை என்றாலும் பெண்சகோதரம் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. என்று தன் மனதுக்குள் நினைக்கின்றாள.;
“எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான்” என்று தன் மனதுக்குள் நினைத்தாள்.
மாலாவின் மகன் கமல் பல்கலைக் கழகத்தில் படிக்கின்றான் அவனுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகின்றது அதற்காக அவள் பல்கலைக் கழகத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.மற்றப் பிள்ளைகளின் தந்தையும் .தாயும் சகோதரங்களும் வரகின்றார்கள் ஆனால் மாலாவுக்கு சகோதரங்கள் கூட வரவில்லை என்று தன் மனதக்குள் நினைத்து விம்மி விம்மி அழுகின்றாள். அந்த வேலையில் கமல் சொல்லுகின்றான் நான் உனக்கு இருக்கின்றேன் உனக்கு என்ன கவலை என்னை எப்படியும் கஸ்டப் பட்டு ஆளாக்கி விட்டாய் நீ வீட்டில் காலாட்டிக் கொண்டு மகாராணி போல இரு என்று கண்ணீர் ததும்பிய படி சென்னான் கமல்
எனக்கு பட்டமளிப்புவிழா முடிஞ்ச பின் எனக்கு வேலை கிடைச்சிடும் உன்னை பைங்கிளி போல பார்ப்பேன் அம்மா என்று இரு விழிகளும் கலங்கிய படி சொன்னான் அந்த வேலையில் மாலா மகனை கட்டியனைத்து முத்தமிட்டாள் மாலாவின் மனதில் சந்தோசப் புயல் வீசியது அவள் மனதில் ஒருவித உறுதியும் ஒரு வித ஆழ்ந்த பாசமும் வந்தது. அதைய நேரத்தல்………….
தொடரும்……….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-