சிலமணிநேரம் சில முடிவுகள்.(பாகம்-06 இது ஒரு தொடர்கதை)
அதைய நேரத்தில் மாலாவின் நண்பி லீலாவும் தன் மகளுக்கு பட்டமளிப்பு விழாவுக்கு வந்தாள் அவளுடைய வாழ்கையும் மலாவின் வாழ்கையைப் போலதான் அமையப் பெற்றது விழா முடிந்த பின்பு மாலாவும் .லீலாவும் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு உணவகத்தில் மதிய உணவு உண்டார்கள் அதைய நேரத்தில்தான் இருவரின் பிள்ளைகளும் சங்கமித்தார்கள்.ஆனால் ஒருவருக்கு ஒருவர் பேச வில்லை.மதிய உணவு உண்ட பின்பு வீடு சென்றார்கள்.
இருவருடைய பிள்ளைகளுக்கு பட்டமளிப்பு விழா முடிந்து (04) மாதங்கள் கழிந்த நிலையில்.இருவருக்கும் வங்கியில் வேலை கிடைத்தது அந்த வேலையில் மாலாவின் மனசு வேற்றுக் கிரகத்தில் இருப்பது போன்ற ஒரு வித மகிழ்ச்சிவந்தது வேலைசெய்து மாதாந்தம் (5000 ரிங்கிற்)வெள்ளி பணம் கிடைத்தது. இப்படியாக வேலை செய்து கொண்டு இருக்கும் போது மாலாவின் மூத்த அண்ணன் தன் மகளுக்காக மாப்பிள்ளை கேட்டு வீட்டுக்கு வந்தார்கள் இந்த விடயத்தை மாலா தன் மகனுக்கு சொன்னால்
அந்த வேலையில் மகன் சொல்லுகின்றான்
“அம்மா நம்மளை அவமதித்தவங்கள் அல்லவா? அவங்களை நம்ம அவமதிக்க இதுதான் சந்தர்ப்பம் அம்மா”
என்ன என்றுதாய் கேட்டால் அதற்கு சொல்லுகின்றான் ஆமாம் சொல்லு மகனே என்றால்
நம்மட வீட்டுக்கு பரிசம்போட பக்கத்து வீட்டு உறவுகளுடன்.வருவாங்க அந்தநேரத்தில் நாலு பேருக்கு மத்தியில் நான் வேண்டாம் என்று சொல்லுவேன் நீயும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் அந்த நேரத்தில் ஏன் என்ற கேள்வியை கேட்பார்கள் அவர்கள் செய்த கொடுமையை அந்த நேரத்தில் பக்கம் பக்கமாக புட்டு வைக்க வேண்டும் என்று மகன் சொன்னான்.
முhலாவின் வீட்டுக்கு பரிசம் போட வந்தார்கள் தங்கை என்று கூப்பிடாதவங்க தன் காரியம் வெல்ல வேண்டுமென்ற காரணத்தால் மாலாவை தங்கை என்று அன்பான வார்த்தையாள் கூப்பிட்டார். என்ன என்று கேட்டாள் மாலா உன்மகனை என் மகளுக்கு திருமணம் செய்ய நீ சம்மதிக்க வேண்டும் என்று சொன்னார் அந்த வேலையில் மாலா ஆத்திரத்தில் சொல்லுகின்றாள்.
“என்மகன் துறவியா வாழ்ந்தாலும் பறவாயில்லை அல்லது ஒரு பிச்சைக் காறியை கட்டிநாலும் என் மகனை உன் மகளுக்கு கட்டித்தர மாட்டேன் என்ற பிடி வாதத்தடன் நாலு சனங்களுக்கு மத்தியில் சொன்னால்”
மாலா.இதனால் ஆத்திரமடைந்த அண்ணன்………………………..
தொடரும்………………………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-