மாம்பழம் போல உன்கன்னம் .
ரெண்டும் சிவந்தடி.
உண்முகம்சந்திரவதனத்தின்-விம்பமடி
உன் விழின் அழகில்-நான்மயங்கிட
விடை தெரியாமல் விதியில்.
பைத்தியமாய் அலைந்தேனடி.
காலம் செய்த சதியென்றோ.
கோலம் செய்த விதியன்றோ
புரியவில்லையடி
முகவரி தெரியாமல்
முந்தி கைபிடிக்க நினைத்தேன்.
நீ முடிந்த வரை ஆபாசம் காட்டினாய்.
முற்றும் துறந்த முனிவராய்.
முகம் கோணாமல்.
முதல் பாசம் காட்டினேன்.
நீ என்னை மூச்சடக்க-வைத்தாயே.
முதல் பாசம் காட்டினேன்.
அது என்னில்-முதல் தப்புத்தானடி.
காலம் செய்த சதியென்றோ.
கோலம் செய்த விதியன்றோ
புரியவில்லையடி
என்னை விட்டு விட்டு ஏன்.
மெதுவாய் அகன்று போகிறாய்.
நெஞ்சம் வெடித்து துடிக்கிதடி.
என் நிம்மதி வாழ்வும் கலைந்ததடி.
என்னை வஞ்சனை செய்து.
உரலில் துவைத்த துவையல்-போல.
என்னை துவைத்து விட்டாயடி.
காலம் செய்த சதியென்றோ.
கோலம் செய்த விதியன்றோ
புரியவில்லையடி
கொஞ்சமும் உன்மனதில்
கருணை இல்லையடி.
கொடுங்கோலான உன்மனசு.
என்னை வஞ்சித்து விட்டதடி.
உன்நிடத்தில் வாழவேண்டுமென்று.
என்மனசு துடியாய் துடிக்குதடி.
நீ செய்த துன்பத்தால்.
சோகப் பட்டியலில் விழுகிறேன்
உன்னை என்னி வாழ நினைத்ததால்.
என் வாழ்வை நானே –புதைகுழியில்
புதைத்து விட்டேனடி.
காலம் செய்த சதியென்றோ.
கோலம் செய்த விதியன்றோ
புரியவில்லையடி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்.உறவுகலே. இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்ச்சி செய்து.கவிவரியாகஎன் நெஞ்சங்களுக்காக விதைத்துள்ளேன்..உங்களின் கருத்தே எங்களுக்கு வழிகாட்டி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-