தன்குடும்பம் வாழவேண்டுமென்று.
தன்உயிரை துச்சமென மதிக்காமல்.
ஆழம் நீளம் அகலம் தெரியாத.
வங்க கடலின் அலைக்குகைக்குள்.
ஒரு கையில் துடுப்பும்.
மறுகையில் வலையும்
பிடித்த கையுடன்-வங்க கடலின்.
அலைக்குகைக்குள் தவளுகின்றான்.
குயில்கள் கீதம் பாட.
கொண்டைச் சேவல்.
பகலவனை அழைக்க.
காலைப் பொழுதினில்.
கார் இருளில் 5 மணிக்கு.
கோயில் மணியோசை-கேட்க.
ஆழ் கடலில் மீன் பிடிக்கும்.
வல்லங்கனை தள்ளி.
புறப்படுவன் எம் மீனவன்.
கடலுக்குச் சென்ற மீனவன்.
இயற்கை அன்னையின்-சீற்றத்தால்
திக்கு திசைமாறி
உப்பள நீரில் கரைந்துபோய்.
உயிர் விட்டவர்கள் -எத்தனைபேர்.
கடலகொள்ளையர்களால்.
சூரையாடப்பட்ட மீனவர்கள்.
எத்தனை பேர்……………..
பினமாக கடலலையின்-கரத்தால்.
கரைக்கு கரைஒதிங்கி பினங்கள்.
எத்தனை ………………….
மீனவனி வாழ்கை-கூரிய.
கத்தி முனையில்.
நடப்பதைப் போன்றது.
கடலுக்குப் போன-தன்கணவன்.
கரை சேரும் வரை.
மனைவி சுவாமியரையில.;
தீபம் ஏற்றி-தன்.
கணவன் கரைசேரும் வரை.
தீபம் அனையாமல்.
தன் கணவனின் -சிந்தனையில்.
தன் ஆழ்மனதை விதைத்த படி.
வாழ்கிறாள்……………………..
ஒருமீனவனின் வாழ்கை.
முற்களும் பறைத் தொடரையும்.
கொண்ட வாழ்கையாக உள்ளது.
தரணம் தப்பினால்-மரணம்.
என்ற மாதிரியல்லவா?
மீனவனி வாழ்கை…..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்.உறவுகலே.
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்ச்சி செய்துபலவரிகளை என் நெஞ்சங்களுக்காக விதைத்துள்ளேன்..உங்களின் கருத்தே எங்களுக்கு வழிகாட்டி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-