என்விழிகள் ரெண்டும்-அழுகிறது.
விம்மி விம்மி அழுகிறது
துலைந்து போன ஜென்மங்களை.
தேடி தேடி அழுகிறது.
பக்குவமாய் வளத்து.
ஆங்குசமாய் பார்த்தோம்.
அக்கு வேறு ஆணிவேறாய்.
ஊடல் சிதரி கிடந்தடா.
என் கண் விழிகள் ரெண்டும்.
நதிநீராய் கண்ணீர்வடித்ததடா.
அம்மாவும் அப்பாவும்-உன்.
உச்சிதனை முத்தமிட்டார்.
நீ கொஞ்சி விளையாடும்
செல்லக் கிளியல்லவோ.
புத்தகப் பைதனை நீ தோழினில்
ஏந்திட்டு வீதிவழி செல்கையில்.
சிங்காரமாய் இருந்ததடா.
உன் கால் பெருவிரல்.
கல்லடி பட்டதால்.உன்நிலைகன்டு.
என் விழி ரெண்டும்
கண்ணீர் வடித்ததடா.மகனே…..
நீ சட்டென்டு தூங்கயில்.
பட்டென்டு குண்டு வந்ததனால்.
சட்டென்டு வெடி வெடித்ததடா.
வீடுமனை கோபுரமும் விகாரமாய்.
சாய்ந்ததடா சாய்ந்ததடா.
விதியென்றோ சதியென்றோ.
புரியவில்லையடா-நீ
உதிரம் வத்தி உடல் கருகி.
இளமைப் பருவத்தில் மடிந்தாயடா.
உன் நிலை கண்டு என்
விழிரெண்டும் கண்ணீர்வடிக்குதடா
அன்புக்கு அடைக்களமாய்.
பாசத்துக்கு ஒளி விளக்காய்.
ஒழுக்கத்துக்குச் சீலராய்.
கண் முன்னே வளர்ந்தாய்.
எங்கள் முத்தான முதல்-செல்வத்தை.
நினைத்து-என்முதுமை வரை
என் கண் வழிகள் ரெண்டும்.
கண்ணீர் வடிக்குதடா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-