எமது குடும்பம்-ஒரு
புன்னகைப் பூக்கள்.
அம்மா அப்பா தங்கை.
சகோதரங்கள் ஒன்றாக.
கூடினால் எங்கள்.
வீடே ஒரு புன்னகை.
பூங்காவனமாக இருக்கும்
பூத்துக் குளுங்கும் புன்னகை
புன்னகைப் பூங்கா வனத்தின்.
ஒளித் தீபம் எங்கள்
அப்பாவும் அம்மாவும் அல்லவா.
பிள்ளைகள் அம்மாவென்றால்.
அது உயிர் எழுத்து புன்னகையல்லவா?
தம்பி தங்கையென்று அழைத்தால்.
அது மெய் எழுத்து புன்னகையல்லவா.
அம்மப்பா.அப்பம்மமா என்றால்.
உயிரும்.மெய் சேர்ந்த புன்னகையல்லவா?
அம்மப்பா அம்மம்மா என்றால்
அது உயிரும் மெய்யும்
கலந்த புன்னகையல்லவா?
மாமா மாமி என்றால் அது.
அதுவும் மெய் எழுத்து புன்னகையல்லவா?
புன்னகையின் பிறப்பிடம்.
புன்னகையின் வசிப்பிடம்.
எங்கள் கூட்டு குடும்பத்தில்
அது ஒரு இருப்பிடம்.
ஒருவனைப் பார்த்து.
மற்றவர்களுடன் கூடி
புன்னகை செய்தால்-அது.
நையாண்டி புன்னகை
ஒருவனைப் பார்த்து ஆகா….ஆகா….
என்று புன்னகைத்தால்-அது
ஆணவப் புன்னகை.
புன்னகை பலவிதம்.
அதை சரியாக புன்னகைத்தால்.
எங்கள் வாழ்கையில் புன்னகை சிறக்கும்.
எமது குடும்பமே புன்னகையால்.
பொங்கும் மகிழ்ச்சி மலரும்
புன்னகை பூத்த முகம்
எப்போதும் வாடாது.
மங்களகரமாக புத்துணச்சியா இருக்கும்.
புன்னகையில்லாத முகம்.
காதலியை காதலனை
இழந்தவன் போல் இருப்பான்.
வாடிய மல்லிகைப் பூப் போலயிருப்பான்.
ஒவ்வெருநாளும் செக்கனுக்குசெக்கன்.
எங்கள்முகத்தில் புன்னகையை.
மலரச் செய்தால் -உங்களை
அறியாமல் வாழ்நாள் சிறக்கும்
ஆயுள் காலம் அதிகரிக்கும்.
எப்போதும் புன்னகையை
புன்னகைத்தக் கொண்டுயிருப்போம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-