மனிதனின் வாழ்கை
குறுந்தூர பயணத்துக்கு-சமம்
எத்தனையோ அவலங்கள்
எத்தனையோ கொடுமைகள்.
வலிகள் தாங்கிய வாழ்கையாகவும்.
இடிகள் விழுந்த வாழ்வும்.
அடிமைகள் என்ற அடைமொழியும்.
யார் ஒரவன் சொல்ல.
சொல்லும் வலிகளை
இதயங்களில் சுமந்துகொன்டு.
மேகம் மறைந்த நிலவு போல.
வாழ்கிறன் மனிதன்.
உதிரத்தில் ஊரிப் பிறந்த-உறவே.
நீ ஊர் அறிய வளர்ந்தாய்.
உன் உதிரத்தில் பாசப்பினைப்பாக.
பிறந்த உறவே-நீ.
வறுமையின் விளிம்பில்.
துயரத்தின் நடுவே.
சுட்டெரிக்கும் பகவலவனின்.
வெம்மைக்கும்.
முத்து மணிபோன்ற மழைத்துளிக்கும்.
இடையே புரச்சி செய்து.
வீதியின் விளிம்பில-;நின்று.
ஒருசாண் வயிற்றுக்கு-பசி தீர்க்க.
படாத பாடுபட்டு-பட்டதுயரோடு.
கிழிந்த உடையோடு
அழுக்குப் படிந்த உடையுடன்.
கண்ணீருக்கும் வாழ்கைக்கும்
இடையே போராட்டம் நடத்தி.
தன் வாழ் நாள் வாழ்கையை.
மேகம் மறைத்த நிலவு போல.
வாழ வகுத்து விட்டன்.
அகிலமே இருளில் கிடக்க.
இரவு நேரத்தில்
அண்ட வெளிஆகாயத்தில்.
குளிர்ச்சியூட்டும்
நிலவு போல மணிக்கு மணி
செக்கனுக்குச் செக்கன்.
நிமிடத்துக்கு நிமிடம்.
மேகங்கள் நிலவை மறைப்பது போல.
சில மனிதனின் வாழ்வை.
மனிதன் என்னும் மேகக்கூட்டம் மறைக்கிறது.
மனிதன் என்னும் மேகக் கூட்டம்
மற்ற மனிதர்களை மறைக்காமல்.
நிலவு போன்ற தெளிவான
ஒளியைப் பரப்பும்.
மனிதனாக வாழ்வோம்.
நம் வாழ்கையை மேகம் மறைத்த.
நிலவுபோல வாழாமல்.
ஒளியூட்டும் நிலவு போல வாழ்வோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-