அன்பில் விளைந்த முத்தே.
ஆழியில் கண்டெடுத்த முத்தே.
தெய்வம் எனக்களித்த முத்தே
நீ தேடிக் கிடைக்காத முத்தே
உன் வரவால் தானடா
என் வாழ்வு உயா்ந்தது
தாய் என்னும் பெருமையை
அள்ளித் தந்த என்
அருமை செல்வமே
சில மணிநேரம் ஓய்வெடுக்க
நீ கண்ணுறங்கு.நீ கண்னுறங்கு
ஆராரோ ஆரிரரோ……..
பிள்ளைச் செல்வமே
கண்முன் பேசும் தெய்வமே
அன்னை தந்தை உறவுக்கு வித்திட்ட
ஆதார சுருதியே நீதானடா
விழித்து இருக்காமல்
நீசில மணி நேரம் கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ……..
குழிசை யாலிசை இராகம்
இனிதென மனம் மகிழ்வார்
மழலை மொழி வாயமுதம் கேட்டாலே
முகமலர்ந்து உன்னை கொஞ்சிடுவாரே
கண்னே கணிஅமுதே
நீ சில மணி நேரம் கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ……..
கண்மணியே பொண்மணியே
உன் பூவிழிக்கு உறக்கம் தரவில்லையா
நித்திரைதேவி கண்மணியை அனைக்கிறாள்.
நீசில மணி நேரம் கண்ணுறங்கு
கண்னே கணிஅமுதே
ஆராரோ ஆரிரரோ……..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-