அம்மா என்று அழைக்கும்
வாயால் மம்மி என்கிறாய்
அப்பா என்று அழைக்கும்.
வாயால் டாடீ என்கின்றாய்.
தமிழா நீ பேசுவது தமிழா.???
நீ தமிழன் அல்லவா?
உன் தாய் மொழியும்-தமிழ் அல்லவா?
அழகான செம்மையான தமிழில்.
அப்பாவை அப்பா என்றும்.
அம்மாவை அம்மா என்றும்.
நம்ம பைந்தமிழில் கூப்பிடன்டா-தமிழா?
அம்மா சோறு தாரும் என்று.
சொல்லும் சொல்லுக்கு.
(ரயிஸ்) என்று அங்கில பினாமியில்.
சொல்லுகின்றார்கள்.
விஸ்கோத்து என்று சொல்லும்.-சொல்லுக்கு.
தமிழ் வார்த்தையை சுருக்கி(விஸ்கட்)
என்று.சொல்லுகின்றாய்.
தமிழா நீ பேசுவது தமிழா?????
ஒருவனுடன் உரையாடும் போது.
அதற்கு பிறகு என்ன என்று -கேட்கும்.
சொல்லுக்குப் பதிலா.(சோ)
என்ற ஆங்கில வார்த்தையை
ஏன்டா தமிழா தமிழில் புகுத்துகின்றாய்.
உன் தந்தையும் தாயும் தமிழ் அல்லவோ.
நம் தமிழ் மொழி செம்மொழி- அல்லவா.
இதை புரியாமல் ஆங்கில பினாமியில்.
பேசுகின்றாய் தமிழா…..
தமிழர்கள் நாம் எல்லோரும்.
தமிழில் பேசினால்-நம் மொழி வளரும்மல்லவா?
நம் தமிழ் மொழியான செம்மொழியை-வளர்க்க.
கி.பி.1-3ம் நூற்றாண்டில். (சங்ககாலத்தில்).
முதற்சங்கம் இடைச்சங்கம்.கடைச்சங்கம்.
என முச்சங்கள் வளர்த்தார்கள்.-நம்
தமிழ் மொழியை வளர்க்க அல்லவா.
எத்தனையோ தமிழ் மன்றங்கள்-இருந்தும்.
தமிழ் வளாத்தாலும்.ஆங்கிலத்தில் அல்லவா.-பேசுகின்றோம்
இன் நிலை இப்படி இருந்தால்.
நம் தமிழ் மொழியின் நிலை என்னவாகும்?
எதிர்கால சந்ததியினருக்கும் நம் தமிழ்மொழியினை
கற்றுக் கொடுப்போம்.
தமிழனாய் இருப்போம்-தமிழ்லை வளர்ப்போம்.
தமிழ்லை கற்போம்……….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கவிதையில் ………திருத்தம் தேவை
வணக்கம் ராணி
(தமிழா நீ பேசுவது தமிழா) என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவியை படித்துள்ளீர்கள்
அதற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்
திருத்தம் தேவை என்று கூறி இருந்திர்கள் அவை எல்லாம் திருத்தப்பட்டுள்ளது.
சில தவறுகள் ஏற்ப்பட்டள்ளது அதற்காக நான் வருந்துகின்றேன்.என்கவிதையில்
குறை உள்ளதை சுட்டிக் காட்டியமைக்கு எனது நன்றிகள் ராணி அறிந்து விடப்பட்ட பிழை அல்ல
அறியாமல் விடப்பட்ட பிழை என் வாசகர்களின் குறை நிறைகளைதான் நான் எதீர்பார்ப்பது
-நன்றி-
-என்றும் அன்புடன்-
-ரூபன்-
awesome lyrics…………….
Thanks
தமிழலை வளப்போம்
தமிழனாய் இருப்போம்,
வாசித்து உங்கள் கருத்தைசொல்லுங்கள்
-அன்புடன்-
-ரூபன்-